2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு, அதற்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களைவிட குறைவான ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது. இத்தகைய ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் பலநாட்களாக அறவழிப்போராட்டத்தை முன்னெடுத்தனர். 26-04-2018 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னை, வள்ளுவர்கோட்டம் அருகேயுள்ள மகளிர் பள்ளிவளாகத்தில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களை நேரில் சந்தித்து, அவர்களின் போராட்டக்கோரிக்கைகளுக்கு ஆதரவளித்து உரையாற்றினார். […]
Category: செய்திகள்
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்கள், கேணல் பருதி ஆகியோரின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ் 22.12.2018
சுவிசில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்சுக் கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்சுக்; கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 22.12.2018 சனிக்கிழமை அன்று […]
கிளிநொச்சி வெள்ள இடர்! 4633 பேர் பாதிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. கடந்த இரவு பெய்த பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டள்ளன. மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க்பபட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. கரைச்சி பிரதேச செயர் பிரிவில் 701 குடும்பங்களை சேர்ந்த 2550 […]
தமிழகம் என்ன உங்கள் சொத்தா? ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசிய சீமான்!
கழகமே (திமுக) குடும்பம் என்றார் அண்ணா ; இன்றோ உங்கள் (கருணாநிதி) குடும்பமே கழகமாகிப்போய்விட்டதே தலைவரே.. இந்த வரிகள் திமுக தொண்டர் ஒருவர் கடந்த சட்ட மன்ற தேர்தல் சமயத்தில் நாளிதழ் ஒன்றுக்கு எழுதியிருந்த கட்டுரையில் இடம்பெற்றிருந்த வரிகள். ஆம், இந்த விமர்சனத்தில் உண்மைகள் இல்லாமல் இல்லை. கடந்த 2006 – 2011 ஆட்சி காலத்தில் திமுகவினர் குறிப்பாக அக்கட்சி தலைவர் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் தமிழகம் முழுவதும் கொடிகட்டி பறந்தது என்றால் அதில் மிகையேதுமில்லை. கருணாநிதி […]
அரசியல் சதித்திட்டத்தினால் 950 மில்லியன் டொலர்களை இழந்தது சிறீலங்கா!
கடந்த ஐம்பது நாட்களில் 950 மில்லியன் டொலர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதெனவும் இது நாட்டில் இடம்பெற்ற பாரிய துரோகச் செயலாகும் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் ராஜபக்ஸ அரசாங்கம் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி செய்து வந்த காலப்பகுதியில் 100க்கும் அதிகமான அமைச்சர்கள் இருந்தனர். இவர்கள் அந்தக் காலப்பகுதியில் மக்களுக்கு […]
ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு!
ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுடன் என்றுமே இணையாது. அப்படி இணையவும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால் 90 சதவீத அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். அப்படி அதிமுகவில், அமமுக இணைவது தற்கொலை […]
ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம்!
விரைவில் மீண்டும் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தங்களை ஆட்சியமைக்க இடமளிக்கவில்லை. எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நான், பிரதமராக பதவியேற்றபோது அதனைச் செய்தேன். இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இருப்பவர்கள் தமது ஆசனங்கள் நிலையானவை என நம்பியிருக்க கூடாது நாங்கள் விரைவில் மீண்டும் ஆட்சியை […]
மூன்று மாதத்தில் அரசாங்கம் கவிழும் – வாசு ஆரூடம்
நாட்டில் தற்போது நீதிமன்றம் நியமித்த பிரதமரும், அமைச்சரவையும் இருப்பதாகவும், இந்த அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் கிடையாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பகிரங்கப்படுத்தியுள்ளார். அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிச்சயமாக அரசாங்கத்தை கவிழ்க்க போவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சில காரணங்களால், தற்போதை அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் கிடையாது. பொதுத் தேர்தல் நடத்தப்படவிருந்த சந்தர்ப்பத்தை உயர் நீதிமன்றம் நிறுத்தியது. இதன் காரணமாவே நீதிமன்ற பிரதமரும், அமைச்சரவையும் உருவாகியது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
கட்சி தாவிய வடிவேல் சுரேஷிற்கு அமைச்சு பதவி வழங்கினார் ஜனாதிபதி!
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து மஹிந்த அணிக்கு கட்சி தாவலில் ஈடுபட்ட வடிவேல் சுரேஷ் மைத்திரிபால சிறிசேனவினால் இன்று இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர். அந்தவகையில் வடிவேல் சுரேஷ் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன் பதவியேற்றார்.
வெறுமையாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆசனம்
மகிந்த ராஜபக்சவை நேற்று முன்தினம் சபாநாயகர் கரு ஜெயசூரிய எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்ததை அடுத்து, நாடாளுமன்றத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது நியமனத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இரா.சம்பந்தன் தற்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியிருந்தார். எனினும், இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களுமே, எதிர்க்கட்சித் தலைவருக்குரிய ஆசனத்தில் அமர்ந்திருக்கவில்லை. சர்ச்சை வெடித்ததை அடுத்து, […]
ரணிலை விட இளைஞர் விவகாரத்தை பார்க்க ஐ.தே.க.வில் எவரும் இல்லையா? – நாமல்
இளைஞர் விவகார அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாமல் ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றது. இதில் தேசிய கொள்கை, பொருளாதார, தொழில் பயிற்சி, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த அமைச்சு பதவி தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, இளைஞர் விவகாரத்தை பார்க்க […]
1990 இற்கு முன்னர் இருந்த நிலைக்கு மயிலிட்டி மக்களை உயர்த்துவோம்! யாழ்.அரசாங்க அதிபர் உறுதி!
1990 ஆம் ஆண்டு இடப்பெயர்விற்கு முன்னர் இந்த மண்ணில் எவ்வாறு இருந்தீர்களோ அந்நிலையை ஏற்படுத்தித் தருவோம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார். வலி வடக்கு பிரதேசத்தின் மயிலிட்டி வடக்கு பலநோக்கு மண்டபமாக அமைக்கப்பட்டிருக்கும் கிராமியச் செயலக திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.வீடுகள் இருந்த அடையாளமே தெரியாதவாறு முற்றிலும் அழிவடைந்த நிலையிலேயே மயிலிட்டி பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. […]











