தமிழ் மக்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் சிங்களக் கிராமங்கள் அபிவிருத்தி

வடக்கு மாகாணத்தில் பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு படை முகாம்களும் புதிதாக சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட இடங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களின் பிரதேசங்களுக்கு என ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்தியே இவ்வாறான சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு, அவை அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பல வீதிகள் இதுவரை திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக உள்ள நிலையில், ஒதியமலை ஊடாகச் சிங்களக் கிராமங்களுக்குச் செல்லும் நெடுங்கேணி – ஒலுமடு வீதி காப்பெற் வீதியாக மாற்றப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேசத்தில், வவுனியா வடக்கில் இருந்து வெடிவைத்தகல்லு வரையான சுமார் 16 கிலோமீற்றர் வரையான வீதி இதுவரை திருத்தப்படாமல் உள்ளது.

எனினும், அங்குள்ள படை முகாமுக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள மூன்று சிங்களக் கிராமங்களுக்குச் செல்லும் வீதி காப்பெற் வீதியாக மாற்றப்பட்டு சிங்கள மக்களினதும் படைத்தரப்பினதும் போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் படையினரினதும் சிங்களக் குடியேற்றங்களினதும் நலன்களை இலக்குவைத்து அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்