கிழக்கில் 14 கோவில்கள் உடைப்பு! – வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த 3 வருடத்துக்குள்ளே 14 இந்து ஆலங்கள் உடைக்கப்பட்டுள்ளது இவற்றில் பெரும்பான்மையானவை எல்லைப்பகுதிகளிலே எனவே எல்லைப்பகுதிகளிலே உடைக்கப்பட்ட இந்து ஆலயங்களை பலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். .வியாழேந்திரன் தெரிவித்தார்.

இந்து கலாச்சார திணைக்களம் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்து ஆலயங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் 73 இந்து ஆலயங்களுக்கு 11 மில்லியன் ரூபாவை வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மீள்கடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் எந்திரி பி.சுரேஸ் தலைமையில் (07) மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாச்சார நிலையத்தில் இடம்பெற்றது இதில் அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். .வியாழேந்திரன் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

இதில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார், அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் விமலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், எஸ். சிறிநேசன், எஸ் வியாழேந்திரன், கே. கோடீஸ்வரன் . இந்து திணைக்கள பணிப்பாளர் பனாவாழ்வு அமைச்சின் பணிப்பாளர் அன்னலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு ஆலய தலைவர்களிடம் நிதிக்கான காசோலையை கையளித்தனர்.

தொடர்ந்து உரையாற்றுகையில்

இலங்கையை பொறுத்தமட்டடில் அம்பாந்தேட்டையில் இருந்த பார்ப்போமாயின் எத்தனை இந்து ஆலயங்கள் இருந்தது ஆனால் அவற்றில் பல காணாமல் போயுள்ளது . இருந்;தபோதும் இப்போது எங்கள் பகுதிகளில் எல்லை பிரதேசங்களில் உள்ள இந்து ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கடந்த வருடம் 2017- 18- 9 அன்று எங்களது அமைச்சர் சுவாமிநாதன் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது அவரை எல்லைப்புற ஆலயங்களுக்கு அழைத்துச் சென்றோம். ஆலயங்களை பாதுகாக்கவேண்டிய அவசியம் பற்றி தெரிவித்தோம். ஆந்த அடிப்படையில் இந்து கலாச்சார பணப்பாளர் உமாமகேஸ்வரனுடன் அமைச்சர் தொடர்பு கொண்டு அந்த ஆலயங்களை அடையாளப்படுத்துமாறு தெரிவித்தார்

அதன் அடிப்படையில் இன்று அதனை செயல்வடிவில் கொண்டுவந்துள்ளார் அமைச்சர் இந்து கலாச்சார பணிப்பாளர் மற்று உத்தியோகத்தர் எல்லோரையும் பாராட்டுகின்றோம் அதேவேளை கடந்த அரசில் இந்து ஆலயத்திற்கு உதவியை பெறுவது என்பது எட்டாக்கனியாக இருந்தது என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்