தேசத்தின் குரலுக்கு யாழ் பல்கலையில் நினைவேந்தல்!

தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளரும் தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்ம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுள்ளது.

யாழ் பல்கலைக் கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சமகால அரசியல் கருத்தரங்கத்தின் போதே தேசத்தின் குரலுக்கு நினைவேந்தல் செய்யப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக் கழக கைலாசபதி அரங்கில் இன்று மதியம் 2.30 மணியளவில் நடைபெற்ற இக்கருத்தரங்கானது தேசத்தின் குரலுக்கான நினைவேந்தல் நிகழ்வுடன் ஆரம்பித்திருந்தது. மேடையில் வைக்கப்பட்டிருந்த தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களது திருவுருவப்பத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச் சுடரும் ஏற்றப்பட்டிருந்தது.

தொடர்ந்து கருத்தரங்கிற்கு வருகைதந்திருந்த அரசியல் ஆய்வாளர்கள், பிரமுகர்கள், ஆர்வலர்கள் மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி நினைவு வணக்கம் செலுத்தியிருந்தார்கள்.

தேசத்தின் குரலின் 12 ஆம் ஆண்டு நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டதுடன் தொடங்கிய சமகால அரசியல் கருத்தரங்கில் கே.ரி.கணேசலிங்கம், குமாரவடிவேல்-குருபரன் மற்றும் எம்.நிலாந்தன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள்.

செய்தி மற்றும் படங்கள் இரா.மயூதரன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்