கூட்டமைப்பு சர்வதேச தலையீட்டை கோரியிருப்பது ஓர் பம்மாத்து நடவடிக்கை – அம்பலப்படுத்தினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சர்வதேச தலையீட்டை கோரி கூட்டமைப்பு கடிதம் என்ற முக்கிய தலைப்புடன் கடந்த 15-08-2017 வெளிவந்த தமிழ் ஊடகங்களின் முன்பக்கத்தில் அதி முக்கிய செய்தியாக வெளிவந்திருந்தது.

எனினும் சர்வதேச சமூகத்திற்கு எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட கடிதத்தின் முழுவிபரங்கள் எதுவும் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

அதே தினம் கொழும்பில் வெளிவந்த ஆங்கில ஊடகங்களில் குறித்த செய்தியானது 13ஆம் திருத்தித்தச் சடத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதனை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியே குறித்த கடிதம் எழுதப்பட்டதாக விபரங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நிராகரித்து வரும் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை கோரி சர்வதேச சமூகத்தின் தலையீட்டைக் கோருவதானது முற்றிலும் தமிழ் மக்களை ஏமாற்றும் பம்மாத்து நடவடிக்கையாகும்.

இவ்விடயத்தை தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மணல்தரை ஒழுங்கை, கந்தர்மடம், யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி ஊடக மாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஊடகங்களுக்கு கூறிய கருத்துக்களின் ஒளிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு சர்வதேச தலையீட்டை கோரியிருப்பது ஓர் பம்மாத்து நடவடிக்கை – அம்பலப்படுத்தினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – http://eeladhesam.com/?p=2195#TNPF

Posted by Eeladhesam News on Donnerstag, 24. August 2017

About இலக்கியன்

மறுமொழி இடவும்