ஜெனரல். ஜெகத் ஜெயசூரிய மீது பிரேசிலில் யுத்தகுற்ற வழக்கு தாக்கல் : தூதுவர் தப்பியோட்டம்!

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது வன்னிப்பகுதியில் இராணுவத்திற்கு தலைமை (2007-2009) வகித்த, இராணுவ தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பிரேசில் நாட்டிற்கான தூதுவராகவுள்ளார். அது மட்டுமின்றி, கொலம்பியா, பெரு, ஆர்ஜென்டீனா, சிலி, உட்பட ஐந்து நாடுகளில் அவருக்கு இராஜ தந்திர பாதுகாப்பும் (Diplomatic Immunity) வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவரது காலப்பகுதியில் சித்திரவதைக்கு உள்ளான 14 பேர் வழங்கிய சாட்சிகள் அடிப்படையில், International Truth and Justice Project (ITJP) என்ற அமைப்பு, தென் அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றின் ஊடாக, பிரேசிலில் அவருக்கு எதிராக வழக்கை தாக்கல் ஒன்றை செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, உடனடியாக பிரேசில் தூதுவரான ஜெகத் ஜெயசூரிய தலைமறைவாகியுள்ளார்.

இது குறித்து இந்த வழக்கில் ஆஜரான, சட்டத்தரணி Carlos Castresana Fernandez கருத்து தெரிவிக்கிக்கையில் “இது ஒரு மறக்கப்பட்ட இனப்படுகொலை” எனவும் “இந்த வழக்கு ஒரு ஆரம்பம் மட்டுமே எனவும் தெரிவித்தார்.

இந்த முயற்சியில் பெரும் பங்கு வகித்த, ஐ.நா முன்னாள் நிபுணர் ஜஸ்மின் சூகா மற்றும் முன்னாள் BBC ஊடகவியலாளரான பிரான்சிஸ் கரிசன் ஆகியோர், இது போன்ற வழக்குகள் சிலி, பெரு மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளிலும் தொடரும் என தெரிவித்துள்னர்.

இதனிடையே இந்த முயற்சிகளை ஒருக்கிணைத்து வரும் மனித உரிமை சட்டத்தரணியாகிய கீத் குலசேகரம், இந்த வழக்கை அடுத்தகட்ட நடவடிக்கைக்கு முன்னெடுத்து செல்லவுள்ளதாக தெரிவிதுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன்
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா

About இலக்கியன்

மறுமொழி இடவும்