வடமராட்சி துன்னாலையில் இன்று அதிகாலை மூவர் கைது!

வடமராட்சி துன்னாலையில் இன்று அதிகாலை மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சிக் கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டவேளை மணலுடன் வந்த டிப்பர் ரக வாகனம் நிறுத்தப்படாமையால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே குறித்தநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித் துறைக் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இக்கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் மேலும் நீடிப்புச் செய்யபட்டுள்ளது. எதிர் வரும் 26 ஆம்
பருத்தித்துறை – வியாபார மூலைப் பகுதியில் ஒருதொகைக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 27 வயதுடைய இளைஞர் ஒருவரே
வலி. வடக்குப் பகுதியில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதியில் க.பொ.த.சாதரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்புன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்