சுண்டிக்குளம் போராட்டத்தை தலைமைதாங்கியவர் இராணுவத்தால் மிரட்டப்பட்டுள்ளார்!

சுண்டிக்குளம் வனஜீவராசிகள் தேசிய பூங்கா அமைக்கும் திட்டத்தின் பின்னணியில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த 196 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை தலைமைதாங்கியவர் சிறிலங்கா இராணுவத்தால் மிரட்டப்பட்டுள்ளார்.

மக்கள் போராட்டத்தை வழிநடத்திவரும் கட்டைக்காட்டைச் சேர்ந்த செல்வராசா-உதயசீலன் என்பவரின் வீட்டிற்கு இன்று மாலை சீருடையில் சென்ற இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் மிரட்டிச் சென்றுள்ளார்கள்.

போராட்டத்தை குழப்பும் வகையில் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளதன் மூலம் நியாயமான மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அச்சுறுத்தி குழுப்பும் நல்லாட்சி அரசின் கைங்கர்யம் அம்பலாமிகியுள்ளது.

ஈழதேசம் இணையத்தள செய்தியாளர் மு.காங்கேயன்!

தொடர்புடைய  செய்தி:

சுண்டிக்குளம் வனஜீவராசிகள் தேசிய பூங்கா திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்!

தொடர்டர்புடைய செய்திகள்
யாழ்.வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கேவில் பகுதியில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவா் ஒருவா் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளாா். வலிப்பு ஏற்பட்டு
வடமராட்சி கிழக்குப் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் விவசாய நடடிவக்கைகளிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மழையினை நம்பிய பெரும்போக பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில்
வடமராட்சி கிழக்கில் முஸ்லீம்களுக்கோ இன்னும் யாரிற்குமோ காணிகள் விற்கப்படவில்லை .ஒரு சிலர் தொழிற்செய்யும் காலத்துக்கு மட்டும் தமது காணியில் இருப்பதற்கு

About இலக்கியன்

மறுமொழி இடவும்