தியாக தீபம் திலிபனின் 30 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு

கிரான் பிரதேசத்திலுள்ள புலிபாய்ந்தகல் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை உணர்வூ பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

ஜனநாயக பேராளிகள் கட்சியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் க.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலிபனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தாப்பட்டது.

கிரான் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அனைத்து தமிழ்கைதிகளும் உடனடியாகவே விடுதலை செய்யப்பட வேண்டும்,

புனர்வாழ்வுதிட்டம் என்ற பெயரில் தமிழ்ப்பகுதிகளில் திட்டமிட்டமுறையில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்,

வடக்கு-கிழக்கு இடைக்காலஅரசு அமையூம்வரை ‘புனர்வாழ்வுதிட்டங்கள்’ என்ற பெயரில் நடைபெறும் இத்தகைய செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படவேண்டும்,

வடக்கு-கிழக்கில் புதிதாக சிங்கள காவல் நிலையங்களும், இராணுவ முகாம்களும் அமைப்பது உடனடியாக நிறுத்தப்படவேண்டும்,

ஸ்ரீலங்காப் படையினரும், காவல்துறையினரும் முகாமிட்டிருக்கும் பாடசாலைகளில் இருந்து உடனடியாக விலகிக்கொள்வதுடன் ஸ்ரீலங்காப் படைகளால் தமிழ் கிராமங்களுக்கு அருகில் உள்ள சிங்கள கிராமங்களின் ஊர்காவல் படையினருக்கு வழங்கிய ஆயூங்களை இந்தியா களைய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத் தமிழர்களின் வாழ்வுக்காக உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்