அமைதி காக்கும் படையில் இலங்கை இராணுவம் தெரிவு செய்யப்பட்டது எவ்வாறு?

இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆராயப்படும் என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவமானது போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களினால் தமிழர்கள் சித்திரவதைகளுக்கு உட்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபையிடம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் இலங்கைப்படையினரை எவ்வாறு தெரிவு செய்ய முடியும் என ஸ்டீபன் டுஜாரிக்கிடம் நேற்றைய தினம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கை மக்களின் மனித உரிமைகள் மற்றும் முன்னேற்றத்திளையும், பாதுகாப்பினையும் உறுதிபடுத்தும் எனக் குறிப்பிட்ட டுஜாரிக், அதற்கான அனைத்து செயற்திட்டங்களையும் ஐ.நா தொடர்ந்தும் முன்னெடுக்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்