பிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு!

மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2019) சனிக்கிழமை பேரெழுச்சியுடன் இடம்பெற்றது. பிற்பகல் 15.00 மணியளவில் பேரணி பாரிசு லாச்சப்பல் பகுதியில் இருந்து ஆரம்பமாகி பல்லின சமூகத்தினரும் பார்த்திருக்க தமிழீழ மக்களுக்கு இடம்பெற்ற அவலங்கள் அடங்கிய பதாதைகள் கருத்துப்படங்களுடனும் தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியபடி அணிவகுத்துச்சென்று லாச்சப்பல் பகுதியில் உள்ள திடலைச் […]

யேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019

யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக உள்ள வீதியில் கறுப்பு உடைகள் அணிந்து அணிதிரண்ட மக்கள். கறுப்பு நிற பலூன்களில் இன அழிப்பு சம்பந்தமமான கோசங்களை எழுதி ஒவ்வொருவரும் தங்களின் கைகளில் ஏந்தியபடியும், பாதாதைகளையும் ஏந்தியபடியும் ஊர்வலமாக இம் மாநிலத்தின் பாராளுமன்றம் நோக்கிப் புறப்பட்டனர். ஆயிரக்கணக்கில் கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற மக்கள் இரண்டரை மணித்தியாலங்களின் பின்பு டுசில்டோர்வ் பாராளுமன்றத்தை வந்தடைந்தனர். அத்திடலில் […]

கண்ணீரில் நனைகிறது முள்ளிவாய்க்கால், பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி

ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் பெருவெளியில் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இறுதி யுத்தத்தில் தனது தாயாரை இழந்த சிறுமி ஒருவர் பிரதான சுடரை ஏற்றியதைத் தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர். தமிழர் தாயத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் கனத்த இதயங்களுடன் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.

சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் ! – ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் 3 ஆம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber Force) சைபர் தாக்குதல் தொடுத்துள்ளனர். மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் சிறிலங்காவின் பிரதமர் ரணிலின் இணையத்தளம் , தூதூவராலயங்களில் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் […]

சிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என அணிதிரழ்வோம் – தமிழின அழிப்பு நாள் மே 18 – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும் உறுதியேற்கும் நாளாகும். அந்தவகையில் தமிழ்த் தேசிய பேரினமாக எம் அணிதிரழ்வே தமிழினத்தின் இருப்பை உறுதிசெய்வதனூடாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு எமக்கு உணர்த்தியிருக்கும் செய்தியாகும். மனிதநேயத்தை பறைசாற்றும் பன்னாட்டு அரசியல் முற்சந்தியிலே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஆகிய […]

ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.ஏற்பாட்டுக்குழுவுடன் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அணிதிரண்டு ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அனைத்து உறவுகளையும் அணி திரண்டு வந்து பங்கெடுக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் மீண்டும் அழைப்புவிடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் தமிழினப்பேரவலம் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குகள் காலை ●10. 30 -அகவணக்கம். ●10.32 -பொது சுடரேற்றல் (முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த ஒருவர்). ●10.33 -ஏனைய சுடர்கள் ஏற்றப்படும் ●10.35-மலரஞ்சலி. ●10.40-மே -18 பிரகடனம் (வடக்கு கிழக்கு சர்வமத தலைவர்கள்) ●10.55-மலரஞ்சலி […]

ஈழத்தமிழர்களுக்கு நீதிகிட்டுவதற்காக தொழிற்கட்சி தொடர்ந்து பாடுபடும் – பிரித்தானிய நாடாளுமன்றில் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் உறுதி!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நெருங்கும் நிலையில் இன்று பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற நினைவு ஒன்றுகூடலில் தமிழர்களுக்கு அனைத்துலக நீதி கிட்டுவதை பிரித்தானியாவின் தொழிற்கட்சித் தலைமை வலியுறுத்தியுள்ளது. இன்று 15.05.2019 மாலை 6:00 மணிக்கு பிரித்தானிய நாடாளுமன்றின் பிரதான கட்டிடத் தொகுதியில் உள்ள பத்தாவது கேட்போர் கூடத்தில், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா அவர்களின் அனுசரணையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு ஒன்றுகூடலில் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி […]

முஸ்லிம் மக்களை அணிதிரட்ட முயன்றோம்-தமிழீழ விடுதலைப் புலிகள்

‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு உத்தியோகபூர்வ ஏடு. இற்றைக்கு சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், விடுதலைப் புலிகள் பத்திரிகையின் முதல் பக்கத்தில், ‘முஸ்லிம்களால் ஒரு நெருக்கடி’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியாகியிருந்த அந்த செய்தியில், ‘சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர்களுடன் சேர்ந்து போராடவேண்டிய தமிழீழ முஸ்லிம்கள் எந்தவிதத் தீர்க்கதரிசனப் பார்வையும் இல்லாமல் சிங்களப் பேரினவாதத்திற்கு உட்பட்டு தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு […]

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு – இந்தியா அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீதித்துள்ளது இந்தியா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், தேசத்துக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றில் ஈடுபடுவதால் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில்:- ”தமிழ் ஈழத்துக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் நோக்கம் இந்தியாவின் இறையாண்மைக்கும், எல்லைப்புற ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கிறது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற பிரிவினை வாதங்களையும், சட்டவிரோதச் […]

“இந்த நூற்றாண்டின் தமிழ்வெளியில் திகழ்பவர் பிரபாகரன்” வைரமுத்து அதிரடி பேச்சு!

இந்த நூற்றாண்டின் தமிழ் வெளியில் திகள்பவர் ஒன்று பெரியார் இன்னொருவர் பிரபாகரன் என்று புகழ்ந்து பேசியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் இடம்பெற்ற தமிழாற்றுப்படை நிகழ்வில் கலந்துகொண்டு தந்தை பெரியார் பற்றி கவிதை படைத்த கவிப்பேரரசு வைரமுத்து இறுதியில் முடிக்கும்போது இக்கருத்தை வெளியிட்டிருந்தார். அப்போது அரங்குநிறைய கரவொலியும் கூச்சலும் நிறைந்தது.அதேவேளை அந்த அரங்கில் அதிகம் திமுக அபிமானிகள் இருந்தும் அவர்களின் தலைவர் கருனாநிதியின் பேரை சொல்லாதது பலருக்கு வருத்தத்தையும், சலசலப்பும் ஏற்படுத்தியிருந்தது.

மூக்கை நுழைத்த இந்தியா! முகநூல் எங்கும் தலைவர் படம்!

தமிழீழ தேசியத்தலைவரின் ஒளிப்படங்களை முகநூல்களில் இருந்து அகற்றும் நடவடிக்கை முகநூல் நிர்வாகம் தொடங்கியுள்ளமை தமிழ் உணர்வாளர்களிடையே அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முகநூல் நிர்வாகத்திடம் இந்திய ஊடகம் கருத்து கேட்ட்டபோது விடுதலை புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் எனவும் , இந்தியாவில் தடைசெய்தும் இருப்பதனால் எங்கள் விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லாததால் ஒளிப்படங்களை எடுக்கிறோம்’ என விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்திய அரசாங்கம் சமூக வலைதளங்களின் அதிகாரிகளை அழைத்து இதுதொடர்பாக ஆலோசனைகளை நடத்தியதாகவும் இவ்வாறான தங்கள் அரசுக்கு […]

சஹ்ரானை கொழும்பில் சந்தித்த சகோதரி மதனியா – 20 இலட்சம் ரூபா கிடைத்த வழி அம்பலம்

தற்கொலைக் குண்டுதாரியான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் காசிமிடம் இருந்து கொழும்பில் வைத்து, 20 இலட்சம் ரூபாவைப் பெற்றதை, அவரது சகோதரியான, மொகமட் நியாஸ் மதனியா ஒப்புக் கொண்டுள்ளார். சஹ்ரானின் இளைய சகோதரியான 25 வயதுடைய மதனியா நேற்றுமுன்தினம் காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவரது கணவன் நியாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார். நேற்றுமுன்தினம் மாலை மதனியாவின் வீட்டைச் சோதனையிட்ட போது, அங்கிருந்து 20 இலட்சம் […]