புலம்பெயர் தேசத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது தமிழ் ஊடகவியலாளர் பலியாகியுள்ளார். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னி பூநகரியைச் சேர்ந்த ஊடகவியலாளரான தில்லைநாதன் ஆனந்தவர்ணன் என்பவரே லண்டனில் இன்று வியாழக்கிழமை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றிற்கு எதிராக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்பு மிக்க பணியினை ஆற்றிவருகின்றனர். இந்நிலையில் புலம்பெயர் தேசத்தில் தமிழ் ஊடகவியலாளரது மரணம் கடும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
Author: இலக்கியன்
பிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள்?
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட சிறிலங்கா அதிகாரிகள் மீது பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் சிறிலங்கா அதிகாரிகளுக்கு எதிராக பயணத் தடைகள் விதிக்க பிரித்தானியா நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என, பிரதிநிதிகள் சபையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு எழுத்துமூலம் பதிலளித்த, பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர், நைஜெல் அடம்ஸ், […]
சுமந்திரன் பிரசங்கத்திற்கு ஆட்களில்லை?
தேர்தல் பிரச்சார களம் யாழில் சூடுபிடித்துள்ள போதும் மக்களோ அது பற்றி அக்கறையற்றவர்களாகவே உள்ளனர். தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் உடுவில் தொகுதியின் இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் தி.பிரகாஸ் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் ஜவர் ‘கற்றறிந்தோர் மொழியுரைகள்’ எனும் தலைப்பில் தமது கருத்துக்களையும்இ கேள்விகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பின் பேச்சாளர் […]
யேர்மனியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொரோனாவால் இருவர் பலி!
யேர்மனியில் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி இருவர் பலியாகியுள்ளனர். யேர்மனியின் தமிழர்கள் அதிகமாக வாழும் நோர்த் ரைன் வெஸ்பாலியா மாநிலத்திலத்தில் உள்ள கைன்ஸ்பேர்க் நகரில் (Heinsberg) ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர் எசன் (Essen ) நகரில் உள்ள சொக்கூம்பெட் (succumbed) என்ற இடத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1112 பேரைத் தாண்டியுள்ளது. யேர்மனியின் மாநிலங்களில் ஒன்றான நோத் ரைன் வெஸ்பாலியா மாநிலத்தில் மட்டும் 484 பேருக்கு கொரோனா வைரல் தொற்று […]
ஐநாவை எதிர்த்து விலகத் தீர்மானித்தது இலங்கை அரசு
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீதான அமெரிக்க தடைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களில் இருந்து விலகுவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. அடுத்த வாரம் ஜெனீவா செல்லும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை உத்தியோகபூர்வமாக மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2015 மற்றும் 2019ம் ஆண்டுகளில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் என்பன அடங்கிய தீர்மானங்களான 30/1 […]
எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி
எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளக் கூடிய வகையில் சிறிலங்கா இராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா. புத்தாண்டு தினமான நேற்று, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில், அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”தேசிய பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எந்த நேரத்திலும் இராணுவம் முன்னுரிமையுடன் செயற்படத் தயாராக இருக்க வேண்டும். உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கேற்ற வகையில், முறையான பயிற்சிகள், தொடர்ச்சியான […]
உலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்
விமானப்படை வைத்திருந்த ஒரேயொரு பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்க விமானப் படையினர் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று (17) சீனன் குடா விமானப்படைத் தளத்தில் பயிற்சியை முடித்த விமானப்படை வீரர்களின் வெளியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு அல்லது முற்றாக அழிப்பதற்கு எமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது. இலங்கையின் வட கிழக்கில் குறிப்பாக வன்னியில் புலிகளின் இலக்குகளை […]
பட்டம் விட்ட மாணவன் கிணற்றில்
பருத்தித்துறை – இம்பருட்டிப் பகுதியில் இன்று (12) மாலை கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான். இதன்போது ஜெகன் ஆனந்த (17-வயது) இம்முறை ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவனே பலியாகியுள்ளான். பட்டம் ஏற்றப் போன போது கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளார் என ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்காக சடலம் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார் என, சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அவரிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் 3 நாட்களாக, 19 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணைகள் முடிவடையாத நிலையிலேயே, இது ஒரு நாடகம் என்றும், அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சி என்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர்களும், […]
மீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்?
யாழ் மாநகரசபையின் வரவு செலவுத்திட்டம் மீண்டும் இரண்டாவது தடவையாக இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. சபைநிதியை முறைகேடாக கையாள்வது உட்பட தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மாநகர முதல்வர் ஆர்னோல்ட்டினால்; சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டமே மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் முதல்வருக்குள்ள அதிகாரத்தின் கீழ் முதல் இரண்டுவருடத்தினுள் அவரை பதவி கவிழ்க்க முடியாதென்பதுடன் வரவு செலவு திட்டத்தை அவரே அங்கீகரிக்க முடியும். எனினும் பின்னராக வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர் முதல்வர் பதவியை தொடர்வது பெரும்பான்மையினை இழந்த […]
கூட்டமைப்புக்குள் பிளவா? – மறுக்கிறது தலைமை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ ஆகிய கட்சிகளுடன் எந்த முரண்பாடுகளும் இல்லை என்றும், கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றும், கூட்டமைப்பின் தலைவர் .இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமது வகிபாகம் மற்றும் முக்கியத்துவம் குறித்து ரெலோ மற்றும், புளொட் ஆகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசுக் கட்சி தலைமையுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளன. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை […]
நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா!
லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா, இன்று ராஜ்யசபாவிலும் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பிக்களும் எதிராக 105 எம்.பிக்களும் வாக்களித்தனர். இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த சட்டத்திருத்த மசோதா லோக்சபாவில் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது. இதில், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன. இதனால் லோக்சபாவில் எளிதாக சட்ட மசோதா நிறைவேறியது. இந்த நிலையில் நாளை ராஜ்யசபாவில் […]












