யாழில் வடக்கு மக்களின் தீவிர எதிப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் அகதிகள்!

வடக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி இரண்டாம் கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டு அகதி கள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாழில் உள்ள சில வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளே இவ்வாறு வடக்குக்கு தற்போது அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்படுகின்றனர். குறித்த வெளிநாட்டு அகதிகள் இரகசியமான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பாக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லையெனவும் தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை […]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 89 பேர் கைது

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக இது வரையில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் 69 பேர் குற்றவியல் விசாரணை பிரிவிலும் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு!

மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2019) சனிக்கிழமை பேரெழுச்சியுடன் இடம்பெற்றது. பிற்பகல் 15.00 மணியளவில் பேரணி பாரிசு லாச்சப்பல் பகுதியில் இருந்து ஆரம்பமாகி பல்லின சமூகத்தினரும் பார்த்திருக்க தமிழீழ மக்களுக்கு இடம்பெற்ற அவலங்கள் அடங்கிய பதாதைகள் கருத்துப்படங்களுடனும் தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியபடி அணிவகுத்துச்சென்று லாச்சப்பல் பகுதியில் உள்ள திடலைச் […]

யேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019

யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக உள்ள வீதியில் கறுப்பு உடைகள் அணிந்து அணிதிரண்ட மக்கள். கறுப்பு நிற பலூன்களில் இன அழிப்பு சம்பந்தமமான கோசங்களை எழுதி ஒவ்வொருவரும் தங்களின் கைகளில் ஏந்தியபடியும், பாதாதைகளையும் ஏந்தியபடியும் ஊர்வலமாக இம் மாநிலத்தின் பாராளுமன்றம் நோக்கிப் புறப்பட்டனர். ஆயிரக்கணக்கில் கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற மக்கள் இரண்டரை மணித்தியாலங்களின் பின்பு டுசில்டோர்வ் பாராளுமன்றத்தை வந்தடைந்தனர். அத்திடலில் […]

கண்ணீரில் நனைகிறது முள்ளிவாய்க்கால், பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி

ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் பெருவெளியில் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இறுதி யுத்தத்தில் தனது தாயாரை இழந்த சிறுமி ஒருவர் பிரதான சுடரை ஏற்றியதைத் தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர். தமிழர் தாயத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் கனத்த இதயங்களுடன் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.

சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் ! – ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் 3 ஆம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber Force) சைபர் தாக்குதல் தொடுத்துள்ளனர். மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் சிறிலங்காவின் பிரதமர் ரணிலின் இணையத்தளம் , தூதூவராலயங்களில் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் […]

மே 18 – வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்! – சீமான் சூளுரை

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தனித்தன்மை கொண்ட ஒரு இறையாண்மை தேசிய இனமாகும். தாயகத்தமிழகம்,தமிழீழம் என்கின்ற இரண்டு தாயக நிலங்களை உடையப் பூர்வகுடி மரபினர் தமிழர். தமிழர்களின் பூர்வீக தாய் நாடான தமிழீழ நிலத்தை பல நூற்றாண்டுகளாக சிங்களர்கள் ஆக்கிரமித்து மண்ணின் பூர்வ குடிகளான தமிழர்களை அடிமைத் தேசிய இனமாக வீழ்த்தி சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர மக்களாக நடத்தி வருகின்றனர். கொடுமையான சிங்கள ஆதிக்கத்தை எதிர்த்து தமிழர்கள் அகிம்சை வழியில் […]

சிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என அணிதிரழ்வோம் – தமிழின அழிப்பு நாள் மே 18 – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும் உறுதியேற்கும் நாளாகும். அந்தவகையில் தமிழ்த் தேசிய பேரினமாக எம் அணிதிரழ்வே தமிழினத்தின் இருப்பை உறுதிசெய்வதனூடாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு எமக்கு உணர்த்தியிருக்கும் செய்தியாகும். மனிதநேயத்தை பறைசாற்றும் பன்னாட்டு அரசியல் முற்சந்தியிலே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஆகிய […]

யேர்மன் வாழ் எம் தாய்த்தமிழ் உறவுகளே!

முள்ளிவாய்க்கால் பெருவலி தாங்கிய, தமிழின அழிப்பின் உச்ச நாள் மே18இன் 10 ம் ஆண்டு நினைவுப் பேரணியோடும், வணக்க நிகழ்வோடும் உணர்வுபூர்வமாக இணைந்து கொள்ள தயாராகுவோம். நாடு தழுவிய வகையில் எமது உறவுகள் வருகை தர வாய்ப்பாக ஒழுக்கமைக்கப்பட்டுள்ள பேரூந்துகளிலும், சிற்றூர்திகளிலும் மற்றும் தனிப்பட்ட முறையிலுமாக குறித்த நேரத்தில் பங்கு கொள்வோம். ஒவ்வொரு குடும்பங்களில் இருந்தும் தவறாது பங்கு கொள்வதோடு, எம்மால் இயன்ற அளவு எமது வாழ்விட மொழி நண்பர்களை, அயலவர்களை, சமூகப் பிரதிநிதிகளை அழைத்து வருவோம். […]

தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்காவிடம் உதவி கோரியுள்ள சிறிலங்கா

எதிர்காலத்தில் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவைச் சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐந்து அமெரிக்கர்களும் உயிரிழந்த – ஈஸ்டர் நாளன்று சிறிலங்காவில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா கண்டிப்பதாகவும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடவதற்கு சிறிலங்காவுக்கு அமெரிக்கா வலுவான ஆதரவை வழங்கும் என்றும் அமெரிக்க […]

500 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டு மீட்பு!

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க வீசிய பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வெடிக்காத நிலையில் இருந்த சக்திவாய்ந்த குண்டு ஜேர்மனின் ஹம்பேர்க் நகரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் வாழும் பகுதியான ஹம்பேர்க்கில் சுமார் 6,000 அளவில் மக்களை வெளியேற்றிய பின்னரே அந்த குண்டு தீயணைப்பு வீரர்களினால் மீட்கப்பட்டுள்ளது. வடக்கு ஜேர்மனியின் துறைமுக நகரமான ஹம்பேர்க்கில் கட்டிட வேலைக்காக கிடங்கு தோண்டும்போதே 1,000-பவுண்டு (500 கிலோ) எடையுள்ள இந்த குண்டு கண்டுபிடித்துள்ளது.

தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த ரிசார்ட், கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது?

முஸ்லிம் அமைச்சர் ரிசார்ட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை அறிவிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ரிசார்ட் பதியுதீனைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியத்திற்கு முற்றிலும் எதிரானவர். முஸ்லிம் தேசியம், இஸ்லாம் மதவாதம் போன்றவற்றில் தீவிர பற்றுறுதி உடையவர். தமிழர் தாயகத்தைச் சூறையாடுவதில் தீவிரம் காட்டி வருபவர். குறிப்பாக, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து முஸ்லிம் குடியேற்றங்களை […]