ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை பதவி விலகக்கூடும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என தற்போது அனைவரும் கூறுகின்றனர் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள்
இந்திய தூதரகத்திற்கு மதிப்பளித்தது முன்னணி!
வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டுகின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் கூறியிருந்தார். ஆனால், கடலுக்கு செல்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் தற்போதும் இடம்பெறுகின்றது. அத்தோடு இதனை கண்டுகொள்ளாமல் பிரச்சினைக்கு தீர்வை காணாமல் இருப்பது இரு தரப்பையும் […]
சாணக்கியன், சுமந்திரனின் பசப்பு வார்த்தை! மக்கள் ஏமாறக்கூடாது -கஜேந்திரன்
சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கில் இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு விடயத்தை தொடர்ந்தும் ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது, தமிழ் தாயகத்தில் […]
யாழ்.பல்கலையில் சுடரேற்றல்:ஆரியகுளத்தில் மரநடுகை!
இலங்கை அரசு மாவீரர் தினத்தை முடக்கிவிட துடிக்க இயலுமானவரையில் நினைவேந்தலை தமிழ் சமூகம் முன்னெடுத்தே வருகின்றது. யாழ்.பல்கலையில் மாவீரர் தின விளக்கேற்றலிற்கு இலங்கை காவல்துறை தடை பெற்றுள்ள நிலையில் இன்று மாவீரர் நினைவுதூபியில் தடாலடியாக மாணவர்கள் அஞ்சலித்து சுடரேற்றியுள்ளனர். புல்கலைக்கழ சூழலை சுற்றி படையினர் காத்திருக்க மாணவர்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். இதனிடையே யாழ்.நகரிலும் மரநடுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரியகுளத்தை சூழ அழகுபடுத்தலின் கீழ் மரங்களை மாநகரசபை உறுப்பினர்கள் நாட்டியுள்ளனர்.
யாழில் கறுப்பு ஜீலை கவனயீர்ப்பு!
தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?, இன அழிப்புக்கு நீதி வேண்டும், அரசியல் கைதிகளை விடுதலை செய், வெளியேறு இராணுவமே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பினர். குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது […]
மனைவி, மச்சான்…கூண்டோடு உள்ளே!
பணிப்பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்த மற்றுமொரு பெண் ஒருவரே இவ்வாறு வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளார். முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைச்செய்தபோது, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பில் 20 வாக்குமூலங்கள் பதிவு […]
ஓடு ஓடு:போட்டோ போட அறிக்கை விட ஓடு!
தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றி ஊடகங்களில் வெளியானதும் அதனை தேடுவதும் பின்னர் அறிக்கைவிட்டு அரசியல் செய்வதும் தமிழ் தேசியப்பரப்பில் சலித்துப்போன காட்சிகளாக மாறிவருகின்றது. அது நிலப்பிடிப்பாயினும் சரி கடல் பிடிப்பாயினும் சரி கண்மூடியிருக்கும் தமிழ் தலைவர்கள் ஊடகங்களில் பேசுபொருளானால் ஓடோடி வருவதும் அவர்கள் பின்னால் கமராவுடன் தொலைக்காட்சிகள் திரிவதும் அண்மைய காட்சிகளே. பூநகரி – கௌதாரிமுனை பகுதியில். சீன நிறுவனமொன்றால் முன்னெடுக்கப்பட்டு வரும் அட்டை வளர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காகவென நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், […]
முள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு!!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான நடைபயணத்தின் மூன்றாவது நாளான இன்று தற்போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியை குறித்த பேரணி அடைந்துள்ளது.இதன் ஒரு கட்டமாக கடந்த மாதம் இடிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக தூபியை கட்டுவதற்கு முள்ளிவாய்க்கால் நினைவு இடத்தின் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிக்கப்பட்டது.
இப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல!!
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் நாங்கள் தெரியப்படுத்துவது, இப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்தோ அல்லது தனிநபர்சார்ந்தோ அல்லது நிறுவனம் சார்ந்தோ நடைபெறுகின்ற போராட்டம் இல்லை. இப்போரட்டமானது வடக்கு – கிழக்கு சார்ந்த சிவில் அமைப்புக்களால் நடத்தப்படுகின்றன என்பதை அறியத்தருகின்றோம் என தவத்திரு வேலன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பொலிகண்டிக்கும் தடையாம்?
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி வவுனியாவிலிருந்து இன்று மன்னார் நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. நாளை யாழ்ப்பாணத்தை அது வந்தடையவுள்ள நிலையில் நிகழ்வின் இறுதி மையமான பொலிகண்டியை சென்றடைய தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இன்று முதல் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை […]
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்
தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தமிழீழ மாவீரர் தினமான இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார். தமது யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் இன்று மாலை உரிய நேரத்திற்கு மாவீரர்களுக்கு நினைவுச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார். இதன்போது அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்
வவுனியாவில் சிங்களப் படையினரதும் பொலிஸாரதும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. சரியாக 6.05 இற்கு ஆலயங்களில் மணி ஒலி எழுப்பப்பட்டு வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மாவீரர் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. இதன்போது சில இடங்களில் துயிலும் இல்லப் பாடலும் ஒலிக்க விடப்பட்டது. படையினரும் பொலிஸாரும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் தடைகளையும் மீறி மக்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர். […]












