அரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்! -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

சிங்களப் பேரினவாதிகளின் கூடாரமாக விளங்கும் சிறிலங்காப் பாராளுமன்றத்தேர்தல் திருவிழா முடிவடைந்துவிட்டது. எதிர்பார்த்தது போலவே பெரும்பான்மை ஆசனங்களை பேரினவாதக் கட்சியான சிறிலங்கா பொதுசனப் பெரமுன பெற்றுள்ளது. இங்கு முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப்பெற்ற ராஜபக்ச அரசில் அங்கம்வகிப்பவர்கள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் ஆவர். 2009ம் ஆண்டில் இருந்து இன்றுவரை அரசியல் செயற்பாடுகளில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் தமிழ்மக்களுக்குத் தேடிக்கொடுக்காமலேயே பத்து வருடங்களை இணக்க அரசில் செய்து வீணடித்த தமிழ் அரசியல்வாதிகள் இனியும் பாராளுமன்றத்தில் […]

சிறிலங்காவின் அரசமைப்பு மாற்றம் குறித்து சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்

சிறிலங்கா அரசாங்கம் அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தங்களில் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து சர்வதேச சமுகம் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். கூட்டமைப்பின் தலைவருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு திருகோணமலையில் நேற்று (26) இடம்பெற்றது. நாங்கள் தேர்தல் முடிவுகள் குறித்து குறிப்பாக வடக்கு கிழக்கு தேர்தல் முடிவுகள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார். 13 வது திருத்தத்தை […]

கண்ணதாசன் தொடர்ந்தும் சிறையில்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக கடமையாற்றிய கண்ணதாசன் மீதான ஆயுள் தண்டனைத் தீர்ப்பை தள்ளுபடி செய்ததுடன், அவரை விடுவித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் கட்டளை வழங்கியிருந்தது. இந்நிலையில் கண்ணதாசன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டு வழக்கை மீள விளக்கத்துக்காக எடுப்பதற்காக வவுனியா மேல் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு நேற்றைய தினம் (26) குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, செப்டம்பர் 7ம் திகதி அழைக்குமாறு தவணையிட்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி […]

சிறிலங்கா நாடாளுமன்ற ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படாத விக்கியின் உரை

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் நீதியரசருமான சி.வி விக்கினேஸ்வரன் பாராளுமன்றில் ஆற்றிய உரை ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படவில்லை. சிங்கள தலைவர்கள் பலர் விக்கினேஸ்வரனின் உரை இனவாதம் என்று கூறி அதனை பாராளுமன்ற பதிவேட்டிலிருந்து நீக்குமாறு குரல் கொடுத்தருந்த நிலையிலும் சபாநாயகர் அதனை நீக்கவில்லை. அதே வேளை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழர்கள் தான் இலங்கையின் மூத்த குடிகள் என்று உரையாற்றியது போன்று, அதனை நிரூபிக்கும் வகையில் ஆய்வுக் கட்டுரைகளை ஆவணங்களை […]

சி.வி.விக்கினேஸ்வரன் விவகாரம்-சிவாஜி காட்டம்

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது. எங்கள் வரலாற்றை – எங்கள் விருப்பங்களை நாம் தெரிவிப்பது அவர்களுக்கு கொதிப்பை ஏற்படுத்துகிறதென்றால், எங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் உங்கள் பாட்டில் செல்லுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிக்கம் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி தொன்மையான மொழி. லட்சக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டி தமிழ்மொழி காணப்படுகின்றது. செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒரு மொழி என்று அங்கீகரிக்கப்பட்ட பின்னர் உலகத்திலே பல […]

மாவைக்கு மீண்டும் முதலமைச்சர் கனவு?

தமிழ் அரசுக்கட்சியின் களையெடுப்பு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் மாகாணசபை கனவுகளுடன் ஓடிப்பிடித்து சந்திப்புக்களை சிலர் நடத்த தொடங்கியுள்ளனர்.எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு தரப்புக்களை களையெடுப்பதில் தமிழரசின் மாவை தரப்பு மும்முரமாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வவுனியாவில் சுமந்திரன் ஆதரவு சத்தியலிங்கத்தை புறந்தள்ளி சிவமோகனை முன்னிறுத்த மாவை முடிவு செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக வவுனியாவில் அவசர கூட்டமொன்றை சனிக்கிழமை கூட்டத்திற்கு முன்னதாக நடத்தியுமுள்ளார். இதனையடுத்து யாழ்ப்பாணத்திற்கு ஓடோடி வந்த சத்தியலிங்கம் சந்திப்புக்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஏற்கனவே தேர்தல் தோல்வியினையடுத்து தனது தமிழரசு […]

தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன்,சிறிதரன் ஆதரவாளர்களுக்கு ரெட் கார்ட்?

இலங்கை தமிழரசுக்கட்சியினை தனது கைகளுள் கொண்டு செல்ல முற்பட்ட சுமந்திரன் – சிறீதரன் தரப்பிற்கு ஆப்படிப்பது போன்று தமிழரசு கட்சியினைமாவை புனரமைப்பு செய்யவுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் 2020.08.29ம் திகதி வவுனியா குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், […]

மணிவண்ணன் விவகாரம்: பரிசீலிக்க குருபரன் கோரிக்கை?

மணிவண்ணன் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்திருக்கும் முடிவின் உள்ளடக்க சரி பிழைகளுக்கப்பால் அது எடுக்கப்பட்ட விதம் தொடர்பில் எனக்கு அடிப்படையான கருத்து வேறுபாடு உண்டென அக்கட்சி ஆதரவாளர் சட்டத்தரணி கு.குருபரன் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசிய கட்சி ஒன்று எப்படி உள்ளக ரீதியாக செயற்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என்ற கடமையில் இருந்து முன்னணி விலகியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். பல்வேறு நெருக்கடிகளை சவால்களை சந்தித்த முன்னணிக்கு இந்தக் கடமை உண்டு. […]

தமிழ் பிரதிநிதிகளுக்கு அழைப்பு-விக்னேஸ்வரன் தங்கள் பக்கம் என்கிறது சிங்கள தரப்பு!

அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முன்வருமாறு வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு கல்வியமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார். அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் தலைமைத் தேரர்களை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்ட பின் கல்வியமைச்சர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், வடக்கில் அரசியல் மிகவும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் அல்ல. வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் […]

“கட்சியின் தேசிய அமைப்பாளர் – ஊடக பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்து நீடிப்பேன்”

“எனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கு எதிரானது, இயற்கை நீதிக்கோட்பாட்டுக்கு எதிரானது என்பதனால் நான் தொடர்ந்து கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்து நீடிப்பேன் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இரு தினங்களில் எனக்கு கட்சி தலைவர் மற்றும் செயலாளரினால் […]

தமிழ் மக்கள் கூட்டணியை பதிவதற்கான விண்ணப்பத்தை மீளப்பெற்றார் விக்கி

தமிழ் மக்கள் கூட்டணியை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக தேர்தல் திணைக்களத்தில் கொடுத்திருந்த விண்ணப்பத்தை அதன் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் திரும்பப் பெற்றிருப்பதாகத் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த விண்ணப்பத்தை அவர் கொடுத்திருந்த போதிலும், பொதுத் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் கோரப்படும் வரையில் அதற்கான அங்கீகாரம் தேர்தல் திணைக்களத்தினால் கொடுக்கப்படவில்லை. அதனால், ஈ.பிஆர்.எல்.எப். கட்சியின் பெயரை ;தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி என மாற்றி மீன் சின்னத்தில் அவரது கட்சி பொதுத் தேர்தலில் களமிறங்கியிருந்தது. ஒரு […]

தமிழர் தேசமும் ஒன்றுபட்டு நிற்கின்றது

இலங்கை என்பது ஒரு பல்தேச நாடாகும். இங்கு இரண்டு தேசங்கள் இருக்கின்றன. அந்தவகையில் எங்கள் உரிமைகள் சமனானதாக இருக்க வேண்டும் இன்றையதினம் (21.08.2020) நாடாளுமன்ற அமர்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்.. எங்களுக்காக அங்கீகாரம் சமனானதாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே எம் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தே அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதற்கான ஆணையே கடந்த தேர்தலின் போது ஏக மனதாக வடக்கு கிழக்கில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. டக்ளஸ் […]