மாவீரர் துயிலும் இல்லம் வன்னிவிளாங்குளம்
Category: செய்திகள்
நியூசிலாந்து மண்ணில் எழுச்சி பூர்வமாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019
மாவீரர் நாள்! தமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் விதையாகி போன தியாக வீரமறவர்களை வணங்கிடும் புனித நாள். இப்புனித நாளில் தமிழீழ விடியலுக்காய் சரித்திரமாகி போன வேங்கைகளுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டும் என்ற வகையில் நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஓக்லாந்து நகரில் கார்த்திகை 27 ஆம் நாள் Mt Roskill war memorial மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வீரவணக்க நிகழ்வுகள் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. மாலை 6.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. தமிழ் […]
கஞ்சிகுடிச்சாறு கண்ணீரில் நிரம்பியது
அம்பாறை – கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது நான்கு மாவீரர்களின் தாயரான ஏரம்பு செல்லம்மா பொதுச் சுடரினை ஏற்றிவைத்துள்ளார். கொட்டும் மழைக்கு மத்தியிலும் பெருமளவான தாய்மார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்ணீருடன் உயிர்நீத்த தமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முழங்காவில் துயிலும் இல்ல நினைவேந்தல்
கிளிநொச்சி – முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாவீரர்நாள் – தரவை மாவீரர் துயிலுமில்லம்
தரவை மாவீரர் துயிலுமில்லம்
இராணுவ தடையை மீறி அஞ்சலி!
தென்மராட்சி – கொடிகாமத்தில் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் தினமான இன்று மாவீரர்களுக்கு பல இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதற்கமைய கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக நினைவேந்தலை நடாத்த முற்பட்டபோது இராணுவத்தினர் தடையை ஏறபடுத்தியுள்ளனர். ஆயினும் தடைகளைத் தாண்டி குறித்த இராணுவ முகாமின் எல்லைப் பகுதிகளில் சுடர் ஏற்றப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வு எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
சிவாஜிலிங்கம் தலைமையிலும் நினைவேந்தல்!
மாவீரர் தினத்தை முன்னிட்டு தனது சுடரேற்றல் பயணத்தை கே.சிவாஜிலிங்கம் ஆரம்பித்துள்ளார்.முன்னதாக யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக இராச பாதை வீதியில் இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த காணியில் தற்போது படையினர் பாரிய இராணுவ முகாம் ஒன்றினை அமைந்துள்ளனர் .இதனாலேயே […]
தடை உடையும், வரலாற்றுக் கடமையில் இருந்து தவறமாட்டோம், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உறுதி
எத்தகைய தடைகள் வந்தாலும், அவற்றை உடைத்தெறிந்து யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்படும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த யாழ். பல்கலைக்கழகம் எழுச்சிக் கோலம் பூண்டிருக்கின்றது. பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவுச் சதுக்கத்தில் மாவீர் தினம் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது. எழுச்சிக்கோலம் பூண்டது யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுச் சதுக்கம்… விடுதலைக்காகக் களமாடி மண்மீது உறங்கும் தமிழீழ தேசப் புதல்வர்களைச் சிந்தையில் இருத்தி வழிபடுவதற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தயாரான நிலையில், அதை தடுத்து […]
அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாரானது
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல மாவீர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின ஏற்பாடுகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளன. இதன்டி, முள்ளியவளை தேராவில் தேவிபுரம் இரணைப்பாலை
பரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!
பிரான்சில் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பொதுமக்கள்,வர்த்தகர்கள் ஈடுபட்டதைக் காணமுடிந்தது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை பல்வேறு வண்ணங்களில் கட்டிகைகளை உணர்வோடு வெட்டி உண்டு மகிழ்ந்தனர்.
அனைத்துக் கட்சிளையும் அணி திரள அழைக்கிறோம்!
சிங்கள வேட்பாளரை சுட்டிக்காட்ட முடியாது என்று மறைமுகமாக தமிழ் வேட்பாளரை சுட்டிக்காட்டிய சிலர் உள்ளனர். ஆனால் எது சரி என்ற முடிவை மக்கள் எடுத்தனர். அந்த தீர்மானத்தை நாமும் எடுத்தோம். இந்த வாக்களிப்பு முறையை இனத்துவேசமான அல்லது இனரீதியான வாக்களிப்பு என்று தென்னிலங்கையில் பலர் கூற முனைகின்றனர். அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (26) மதியம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை […]
மாவீரர் நாள் நினைவேந்தலைக் குழப்ப யாழ். பல்கலை நிர்வாகம் கடும் முயற்சி – மாணவர்கள் பல்கலை வளாகத்துள் நுளைய இருநாள் தடை
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு தடை விதித்து நாளைய பத்திரிகைகளில் பல்கலைக்கழக நிர்வாகம் விளம்பரம் வெளியிடுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நாளைய தினம் 27ஆம் திகதி மாவீரர் நாளை கடைப்பிடிக்க மாணவர்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி வெளியிட்டுள்ளார். இந்தப் பணி அவசர அவசரமாக இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. அனைத்துபீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வளாகத்தினுள் 27.11.2019 மற்றும் 28.11.2019 ஆகிய தினங்களில் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதனை இத்தால் அறியத்தருகின்றேன். மாணவர்கள் […]












