அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் நீரை வீசியிருந்தார். தோட்டத் தொழிலாளர் தொடர்பாக முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே அப்படி செய்ததாக மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று (25) மனோ கணேசனுக்கு […]
Category: செய்திகள்
ஆரையம்பதியில் மூன்று இளைஞர்கள் பலி! நடந்தது என்ன?
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவு, ஆரையம்பதி கிழக்கு திருநீற்றுக்கேணி குளத்தில் இன்று (25) காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து காணாமல் போன மூன்று இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். வெற்றுக் கலன்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட படகு ஒன்றில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்துள்ளது. இந்நிலையிலேயே இன்று மாலை இவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தோட்டக்காட்டான் என்றார் அத்தாவுல்ல, அவருக்கு தண்ணீரால் ஊற்றினார் மனோ கணேசன்
மலையகத் தமிழர்களைத் தோட்டக்காட்டான் என விழித்துக் கூறிய ஏ.எல்.எம். அத்தாவுல்ல மீது, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குடிதண்ணீரை ஊற்றியதுடன், அவரைக் கடுமையாகத் திட்டித்தீர்த்தார். சக்தி ரி.வியின் இன்று (24) இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. நேரடி ஒளிபரப்பாக இடம்பெற்ற இந்தக் காட்சியை மக்கள் நேரில் பார்வையிட்டனர். சக்தி ரி.வியில் வாராந்தம் நடைபெறும் மின்னல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு அரசியல் விவாதம் நடத்தப்படும். இதன்போது, வாசகர்கள் நேரடியாகவே அந்த அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்பினால் […]
தமிழ் பெயர் பலகைகளை அழித்தவர்களை கைது செய்ய சொன்ன இனப்படுகொலையாளி.!
தென்னிலங்கையில் தமிழ் வீதிப் பெயர் பலகைகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக விசாரணை நடத்தி கைது செய்யுமாறு இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்ச நேற்று (24) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பெயர் பலகைகளை மீள பொருத்துமாறு தனது அலுவலகத்திற்கும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஶ்ரீகாந்தா முடிவு: அதிகரிக்கும் தமிழ்க் கட்சிகளின் எண்ணிக்கை
ரெலோவின் முன்னாள் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தலைமையில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் பொறுப்பிலிருந்து சிறிகாந்தாவை இடைநிறுத்துவதென நேற்று முன்தினம் ரெலோ தலைமைக்குழு முடிவெடுத்தது. அது குறித்த கடிதம் நேற்று அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிய சிறிகாந்தா, புதிய கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார். இதில் ரெலோவின் யாழ் மாவட்ட பிரமுகர்கள் பலர் இணைந்து கொள்வார்கள் என தெரிகிறது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் […]
அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டேன் – கோத்தா
அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு தான் ஒருபோதும் அடிபணியமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்று பௌத்த பிக்குகள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். அந்த ஆணையின் படியே நான் செயற்படுவேன். ஒரு நோக்கத்துக்காகவே என்னை மக்கள் தெரிவு செய்தனர். அவர்கள் விரும்பியதை நிறைவேற்றி வைக்க வேண்டும். சில அரச சார்பற்ற நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கமை, குற்ற வி்சாரணைப் பிரிவின் அதிகாரிகள் சிலர் விசாரணைகளை நடத்தினர்” […]
மாவீரர் தின எழுச்சிக்கு தயாராகின்றது தேசம்:சலசலப்புக்கள் வேண்டாம்!
மாவீரர் தினத்தை குழப்ப முற்படுகின்ற சிறுசம்பவங்களை முன்னிலைப்படுத்த வேண்டாமென பகிரங்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. 27ம் திகதிய மாவீரர் தினத்தைய நிகழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் தூண்டல் நடவடிக்கைகள் தொடர்பில் முன்னுரிமை வழங்கவேண்டாமென ஊடகங்களிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே முள்ளிவாய்க்காலில் மாவீரர் இ துயிலுமில்ல துப்பரவு பணியில் ஈடுபட்ட உழவு இயந்திர உரிமையாளர் இன்றையதினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். நாளை மறுதினம் மாவீரர் தினம் இடம்பெறும் நிலையில், மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே […]
புலிகள் மீளுருவாக்கம்: யாழில் வீடொன்றில் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு
அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட வீட்டில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வீட்டில் பெரியளவிலான ஆயுதக் கிடங்கு உள்ளதாக இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டனர். இதனையடுத்து அதுதொடர்பாக நீதிமன்றின் அனுமதியைப் பெற்று அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இராணுவத்தினர் அறிவித்திருந்த நிலையிலையே தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புலிகளின் மீளுருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வீட்டில் ஆயுதக் கிடங்கு அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட […]
கோத்தபாய ராஜபக்சேவின் டெல்லி வருகையை எதிர்த்து டெல்லியில் நவ.28-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்- வைகோ
இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் வருகைக்கு எதிராக டெல்லியில் நவம்பர் 28-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தீவில், மனிதகுலம் சந்தித்திராத பேரழிவுக்கு ஆளான ஈழத்தமிழர்கள், நாதி அற்றுப் போனோமா நாம் என்று பதறிக் கதறி, அவலத்தில் கூக்குரல் இடும் நிலை, தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த அதிபர் மகிந்த இராஜபக்சேயின் இராணுவ அமைச்சராக இருந்த ஈவு […]
தமிழ் தேசிய தலைவர் ” மேதகு பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா
” தமிழர் விடியல் கட்சி ” சார்பில் பழனி அருகே கோவை ராமகிருஷணன் தலைமையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கு ம்….. ” தமிழ் தேசிய தலைவர் ” மேதகு பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா துளிகள்….
துட்டகைமுனு எனும் கோட்டாபய ஆகிய நான்…!
ருவான் வெலிசாய…! ஒட்டுமொத்த இலங்கையின் – இலங்கையரின் கவனத்தையும் நேற்று முன்தினம் தன்பக்கம் ஈர்த்துக் கொண்ட இடம். ஆம்…! இங்குதான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம்மிக்க ஏழாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்த இடம். ஜனாதிபதியாகப் பதவியேற்பவர் தனக்குப் பிடித்தமான இடத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், கோட்டாபய ராஜபக்ச ருவான் வெலிசாயவில் பதவி ஏற்றுக்கொண்டதற்குப் பின்னால், ஓர் ஆழமான வரலாற்றுக் காரணம் உள்ளது. […]
சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக முன்மொழியவில்லை – சம்பந்தன்
சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறு, ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியதாக வெளியான செய்திகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார். தாம் யாருக்கும் எப்போதும் அவ்வாறான அறிக்கை வெளியிடவோ, கருத்துக்களைக் கூறவோ இல்லை, இது முற்றிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்விவகாரம் என்றும் அவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் கூறியுள்ளார். “தேர்தலில் வடக்கு, கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தெளிவான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு அமைச்சரவையும், சிறிலங்கா அதிபரும் […]











