இறுதிப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பிற்கு நீதி கோரிய விசாரணையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால நீடிப்பு வழங்கக் கூடாது என்றும் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று சமர்ப்பிக்கப்பட்ட விசேட பிரேணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என ஈபிடிபி மற்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் குழப்பங்களை ஏப்படுத்திய நிலையில் சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே முதல்வர் ஆர்னோட்டினால் குறித்த […]
Category: செய்திகள்
கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை!
ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தபோதும் கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. சிவசக்தி ஆனந்தன், எஸ்.வியாழேந்திரன் தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய 14 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11 பேர் மட்டுமே பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றுச் சபையில் இருந்தபோதும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. ஆயினும், அவரது ரெலோ கட்சியின் மற்றொரு எம்.பியான கவீந்திரன் […]
சிங்களத்தைக் காப்பாற்ற ஜெனீவாவில் கடை விரிக்கிறது கூட்டமைப்பு
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரில் முதன்முறையாக இலங்கையிலிருந்து பெரும் அணியினர் சென்று கலந்துகொள்கின்றார்கள். ஜனாதிபதி தரப்பு, பிரதமர் தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரப்பிலிருந்தே இந்த அணிகள் களமிறங்குகின்றன. இது தவிர, வழக்கம்போல, முன்னாள் படையதிகாரிகளை கொண்ட, மஹிந்த சார்பு அணியும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை விவகாரங்களை இலங்கையே கவனித்துக்கொள்ளும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செய்தியுடன் அவரின் குழுவொன்று ஜெனிவா பயணிக்கின்றது. மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, […]
நாளை தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனை திறப்பு விழா
தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மக்கள் பணிமனை 10-03-2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு இல 258, துர்க்கை அம்மன் வீதி, ஆனந்தபுரம் என்ற முகவரியில் திறந்துவைக்கப்படுகிறது. கட்சியின் செயலாளர் நாயகமும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இந்த பணிமனையை திறந்துவைப்பார். கட்சியின் பல முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று தமிழ் மக்கள் கூட்டணி செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றடுக்கும் வகையில் எமது அரசியல், […]
போர்குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவும் ஆணையாளர் பரிந்துரை
போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகதத்தன்மையான உள்ளக விசாரணை நடைபெறவில்லை என்பதால் போர்க்குற்றம் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்து வழக்கு தொடரும் நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தனது இலங்கை தொடர்பான அறிக்கையில் பரிந்துரைத்திருக்கிறது. ” இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் ” என்ற தா;தலைப்பிலான இந்த அறிக்கை நேற்று கசியவிடப்பட்டது. இந்த அறிக்கை மனித உரிமைகள் ஆணையாளரினால் மனித உரிமைகள் சபைக்கு […]
குற்றம் செய்தவர் தண்டிக்கப்படவேண்டுமாம் -சரத்
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஏதாவது தவறு செய்திருந்தால், அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ”முன்னாள் கடற்படை தளபதி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டால், தண்டிக்கப்பட வேண்டும். தமது மேல்மட்டத்தை திருப்திப்படுத்துவதற்காக, 12 இளைஞர்களைக் கடத்தி கொலை செய்வதற்கு உத்தரவிட்டிருந்தால், அவர் மீது சட்டத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாங்கள் […]
தமிழர்களை நோக்கி கோத்தபாய சவால்!
சிறுபான்மையினரின்- குறிப்பாக தமிழர்களின் ஆதரவு இன்றி, சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தம்மால் அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற வேண்டும் என்பது அவசியமில்லை. 2010இல் மகிந்த ராஜபக்ச, தமிழர்களின் ஆதரவு இல்லாமல், 1.8 மில்லியன் வாக்குகளால் வெற்றி பெற்றார். 2015இல் அவர் தோல்வியடைந்தமைக்கு, தமிழ், முஸ்லிம்களின் […]
சிறிலங்கா வருகிறது சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு
சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில், இந்தக் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. எனினும், குழுவின் பயண நாட்கள் தொடர்பான விபரங்கள், மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் கடந்த பெப்ரவரி 18ஆம் நாள் தொடக்கம் 22 ஆம் நாள் வரை நடந்த சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழுவின் இரகசியக் கூட்டத்திலேயே சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கான பயணம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பிரித்தானியா, காபோன், […]
மன்னார் புதைகுழி அகழ்வை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை இடைநிறுத்துமாறு, மன்னார் நீதிவான் சரவணராஜா இன்று உத்தரவிட்டுள்ளார். மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் 335 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இந்த எலும்புக்கூடுகளில் இருந்து ஆறு மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு, றேடியோ கார்பன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த எலும்புகள் அண்மைக்காலத்தில் புதைக்கப்பட்டவை அல்ல என்றும், 1499 ஆம் ஆண்டுக்கும், 1719 ஆண்டுக்கும் இடைப்பட்டவை என்றும் றேடியோ கார்பன் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. […]
பிரிகேடியர் கடாபியின் தாயார் இயற்கை எய்தினார்!
பிரிகேடியர் கடாபி அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி இன்று இயற்கை எய்தினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரும், சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்பு நடவடிக்கைக்கான தளபதியும், தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணித்த தளபதியும், படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும், அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்தவருமான பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்களின் தாயாரே ஆறுமுகம் மகேஸ்வரி […]
மாபெரும் மே தின ஊர்வலம் – சுவிஸ்
சுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் ஊர்வலத்தில் பங்கெடுத்து எமது உரிமைகளுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க அனைவரையும் அழைக்கின்றது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.
கம்பரெலியவில் காசடிக்கும் சிறிதரன் எம்.பி
கம்பரெலிய( ஊரெழுச்சி) திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதிகள் செப்ப னிடும் பணிகளில் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள் ளனா். கிளிநொச்சியில் கம்பரெலிய திட்டத்தை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குத்தகைக்கு எடுத்துள்ளார். கடந்த ஒக்ரோபர் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சின் போது ரணிலுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்ததற்கான வெகுமதிகளில் ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு எனக் கூறி கம்பரெலிய திட்டம் ஊடக பெருந்தொகை பணம் […]











