சிங்கள மக்களுக்கு எம்மை பற்றியபோதிய அறிவின்மையே தமிழ் – சிங்கள உறவு மேம்படாமல் இருக்கக் காரணம்! விக்னேஸ்வரன்

என்னை கொலை செய்ய கொலை வெறியில் இருந்த சிங்கள இளைஞன் தன் தவறை உணர்ந்து மனம்மாறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டியுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதிலிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார். அந்தக் கேள்வி பதிலில், என்னுடைய சில கேள்வி பதில்களை வாசித்துவிட்டு ஒரு படித்த சிங்கள இளைஞர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். பேச்சு கிட்டதட்ட பின்வருமாறு அமைந்தது. இளைஞர் – ‘சேர்! உங்களைக் கொல்ல வேண்டும் என்ற கொலை வெறியில் இருந்தேன். […]

முல்லையில் துயிலுமில்ல காணி பிடிப்பு!

தமிழ் மக்களிற்கான விடிவினை தந்துவிடப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் மறுபுறம் காணிபிடிப்புக்கள் பௌத்தமயமாக்கல் என்பவை தளர்வின்றி தொடர்கின்றது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை தனிநபரிடமிருந்து இராணுவத்துக்கு சுவீகரிப்பதற்கான நில அளவீட்டு பணி வியாழக்கிழமை (18) இடம்பெறவிருந்த நிலையில் அளவீட்டு பணிகள் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசின் நில அளவை திணைக்கள அதிகாரிகள் நில அளவீட்டு பணிக்காக துயிலும் இல்ல காணிக்கு சென்றபோது அங்கு கூடிய மக்கள் […]

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் 50ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் , மின்சார கம்பி பொதுமக்களின் கூட்டத்தில் அறுந்து […]

யாழில் ரணிலின் வருக்கைக்கு எதிர்ப்பு!!

யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பழைய பூங்கா அருகில் இப் போராட்டம் இடம்பெற்றது. பழைய பூங்கா அருகில் காவல்துறையினர் வீதித் தடைகளை அமைத்து போராட்டகாரர்களைத் தடுத்தனர். இதேவேளை ரணிலின் யாழ் பயணத்தை முன்னிட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ். மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதோடு, அப்பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை […]

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்களை ஏமாற்றிய நைஜீரிய பிரஜைகள் கைது!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் நைஜீரிய பிரஜைகள் என காவற்துறையினர் தெரிவித்தனர். மேலும் இருவருக்கும் கடவுச்சீட்டு இல்லை என்றும், கடவுச்சீட்டுகள் நீதிமன்ற வசம் இருப்பதும் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பண மோசடிகள் தொடர்பில் காவற்துறையினரிடம் 3 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், 3 முறைப்பாடுகளும் பெண்களால் செய்யப்பட்டுள்ளன. 19.01.2023 அன்று 1,045,000 ரூபாவும், 07.03.2023 அன்று 10,222,634 ரூபாயும், 06.07.2023 […]

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு !

யாழ்ப்பாணத்தில் தந்தை தனக்கு பணம் கொடுக்காததால் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (29.12.2023) இடம்பெற்றுள்ளது. இதன்போது செல்வச்சந்நிதி கோவில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனின் தந்தை அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நிலையில் இளைஞன் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயில்வதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். தந்தை தனக்கு பணம் கொடுக்க மறுத்த காரணத்தால் நேற்றையதினம் (29) குறித்த இளைஞன் வீட்டில் தவறான […]

மோதலை தவிருங்கள் – சிறீதரன்

இலங்கைத் தமிழரசு கட்சிக்கான தலைமைத்துவ உள்ளக தேர்தல் எதிர்வரும் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் கட்சிக்குள் போட்டியிடுகின்ற எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரை பற்றிய தவறான பதிவுகளை அல்லது பின்னூட்டங்களையோ அன்றி விவாதங்களையோ சமூக வலைத்தளங்களிலும் பொது வெளிகளிலும் மேற்கொள்ளக்கூடாது என தலைமைக்கு போட்டியிடுகின்ற சி.சிறீதரன் அறிவித்துள்ளார். இன்று மாவட்டத்தின் சகல கட்சி அங்கத்தவர்களுக்கும் இறுக்கமான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எக்காரணம் கொண்டும் உள்ளக தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சியினுடைய உறுப்பினர்கள் மீது எதிராகவோ அன்றி வஞ்சனை […]

எனது வாக்கு கஜேந்திரகுமாரிற்கே:சி.வி!

வடக்குக் கிழக்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவ்வாறான ஒரு பின்னணியில் கஜேந்திரகுமார் தேர்தலை புறக்கணிப்பது நடைமுறை சாத்தியமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து தொடர்பாக பதிலளித்துள்ள அவர் “வழமைப் போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தேர்தல் புறக்கணிப்பை கண்காணித்து வழிநடத்தியிருப்பார்கள். எனினும் தற்பொழுது வடக்குக் கிழக்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவ்வாறான ஒரு பின்னணியில் […]

ஈழத் தமிழர்களை ஆழமாக நேசித்த விஜயகாந்த் அவர்களது மறைவு ஈழத் தமிழ் மக்களுக்குப் பேரிழப்பு..!

தமிழ் திரைத்துறையில் 40 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவரும், தமிழக தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும் முன்னைநாள் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பெருமதிப்பிற்குரிய விஜயகாந் அவர்கள் – சுகயீனம் காரணமாக மறைந்த செய்தி உலகத் தமிழர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மீதும், தேசியத் தலைமை மீதும் மிகுந்த அன்பும் – மரியாதையும் – பற்றும் கொண்டு, தனது இறுதிக்காலம் வரை விஜயகாந்த் அவர்கள் வாழ்ந்திருந்தார். ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி உலகத்தமிழர்களின் மனங்களிலும் […]

கண்ணீர் வணக்கம்-தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழின உணர்வாளரும் பிரபல திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத்தின் தலைவருமாகிய புரட்சிக் கலைஞர் கலைமாமணி விஜயகாந்த் அவர்கள் 28.12.2023 அன்று சாவடைந்துள்ளார் என்ற செய்தி, தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியினையும் ஆழ்ந்த துயரினையும் ஏற்படுத்தியுள்ளது. இயல்பாகவே தமிழ்மொழி மீது பற்றுக்கொண்ட விஜயகாந்த் அவர்கள், கல்விகற்கும் காலத்திலிருந்தே இந்தி மொழித்திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். ஈழத்தமிழர்கள் மீது பேரன்பு கொண்ட விஜயகாந்த் அவர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை முழுமையாக ஆதரித்து வந்ததோடு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு […]

விஜயகாந்துக்கு யாழில் கண்ணீர் அஞ்சலி

மறைந்த தென்னிந்திய பிரபல நடிகரும் , தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான , கப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த்க்கு யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழீழ ஆதரவாளர் விஜயகாந்த் காலமானார்

தமிழீழ ஆதரவாளர் விஜயகாந்த் காலமானார்.விஜயகாந்த் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சென்னை மணப்பாக்கம் மியாட் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அந்நிலையில் வைத்தியசாலை மற்றும் விஜயகாந்தின் இல்லம் அமைந்துள்ள சாலிக்கிராமம் பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த், இந்திய […]