சிறிலங்காவின் ஆட்பதிவுத் திணைக்களம் நாளை தொடக்கம், புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வியானி குணதிலக தெரிவித்துள்ளார். “இந்த அடையாள அட்டைகள், ஸ்மார்ட் தேசிய அட்டைகளாக அறிமுகப்படுத்தப்படும். விண்ணப்பதாரிகள், புதிய அடையாள அட்டைகளுக்கான ஒளிப்படங்களை மின்னஞ்சல் மூலமே அனுப்ப வேண்டும். அனுமதிபெற்ற ஒளிப்படப்பிடிப்பு நிலையங்களிலேயே ஒளிப்படங்கள் எடுக்கப்பட வேண்டும் , ஔப்படத்துக்கான பற்றுச்சீட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். நாடு முழுவதும், 2100 ஒளிப்பட நிலையங்கள், இதற்கான அனுமதியைப் பெற்றுள்ளன” என்றும் […]
Category: செய்திகள்
இறுகுகின்றது கேப்பாபுலவு போராட்டம்?
தமது காணிகளை விடுவிக்க கோரும் கேப்பாபிலவு மக்களது முற்றுகைப்போராட்டம் முல்லைதீவு இராணுவ கட்டமைப்பு தலைமயகம் முன்பதாக இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளது.தமது சொந்த காணிகளிற்கு விடாவிடின் நாளை தாங்களாகவே காணிகளிற்குள் புகப்போவதாக அறிவித்து நேற்று கடிதங்களை அவர்கள் அனுப்பியிருந்தனர்.இதன் தொடர்ச்சியாக முகாம் வாசலில் தமது போராட்டத்தை துரிதப்படுத்தியுள்ளனர்.படையினரால் தமக்கேதும் ஏற்படுமிடத்து அதற்கு இலங்கை ஜனாதிபதியே பொறுப்பேற்கவேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே வடக்கில், பாதுகாப்பு படையினர் வசமிருக்கும் காணிகளில், 1,099 ஏக்கர் காணிகள், 2019 ஜனவரி இரண்டாம் வாரத்தில் […]
வீதியால் சென்ற இளைஞன்மீது வாள்வெட்டு – மூளாயில் சம்பவம்
வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை வழிமறித்த இருவர் மீது வாளால் வெட்டியதில் அவர் கையில் காயமடைந்தார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில் மூளாயில் இடம்பெற்றது. வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் அவர்களிடம் இருந்து வாளைப் பறித்து நேரடியாக வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையம் சென்று அதை ஒப்படைத்தார். இச்சம்பவத்தில் மூளாய் முன்கோடையைச் சேர்ந்த அ.யசிந்தன் (வயது-33) என்ற இளைஞனே காயமடைந்தார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு 7 மணியவில் குறித்த இளைஞன் மூளாய் – […]
அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளுடனான டீலில் உருவானது என கருத்து தெரிவித்தமை […]
பௌத்தமதத்திற்கே முன்னுரிமை-ரணில்
இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளில் பௌத்தமதத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று காலை கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமீபத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட வேளை அரசமைப்பையும் மக்களின் இறைமையையும் பாதுகாப்பதற்காக பௌத்தமத பீடாதிபதிகள் காட்டிய அக்கறையை பிரதமர் பாராட்டியுள்ளார்.மாவனல்லயில் புத்தரின் சிலைகள் உடைக்கப்பட்ட விவகாரத்தை கையாள்வதற்காக சிரேஸ்ட காவல்துறை அதிகாரியை நியமித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய அரசமைப்பை உருவாக்கும்போது பௌத்தத்திற்கு […]
வடக்கு அமைச்சராக சிங்களவர் இருந்தாலும் பரவாயில்லை:சுமந்திரன்!
வடக்கு மீள்குடியேற்றம்,மீள்கட்டுமானம்,அபிவிருத்தி அமைச்சினை சிங்களவரொருவரிடம் கையளிக்கவேண்டுமென நான் கோரி வந்தேன் என தெரிவித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடமிருந்து அமைச்சினை பறித்தே சிங்களவர் ஒருவரிடமேனும் அதனை கையளிக்க தான் கோரியிருந்ததாக தெரிவித்த அவர் தற்போது அது பிரதமரிடம் சென்றுள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தனது வீட்டிற்கு அழைத்து பேசிய அவர் அவ்வாறான அமைச்சு பிரதமரிடம் இருக்கவேண்டுமென்ற எமது எதிர்பார்ப்பினை தற்போது நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்த அவர் பொறிமுறையொன்றின் ஊடாக அமைச்சரவையில் இணையாவிட்டாலும் தற்போது அரசில் எமது அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் […]
வடமராட்சி கிழக்கிலும் வெள்ளத்தால் பாதிப்பு, உதவிகள் இல்லாமல் அவலம்
கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் வடமராட்சி கிழக்கில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமராட்சி கிழக்கின் ஆழியவளை, உடுத்துறை, கொடுக்கிளாய், தாளையடி போன்ற பிரதேசங்களே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலரும் உறவினர்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும் தங்கியுள்ளனர். தொடரும் மழையால் அந்தப்பகுதிகளில் மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அந்த மக்கள் […]
கிளி பிரமந்தனாறு பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டம் பிரமந்தனாறு பகுதியில் KN/58 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 539 குடும்பங்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பில் நேற்று 27/12/2018 நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் எனும் பெயரால் 27 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வலி வடக்கு கிராமமான மயிலிட்டி தற்போது பகுதியளவில் விடுவிக்கப்பட்டு மீள் குடியேற்றத்திற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தமிழர் தாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அகதிகளாக்கப்பட்டிருந்த […]
கிளிநொச்சியில் விபத்து: இருவர் படுகாயம்
கிளிநொச்சியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, பொது வைத்தியசாலைக்கு இன்று (வியாழக்கிழமை) இவ்விபத்து சம்பவித்துள்ளது. பேருந்தின் பின்னால் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனம் அதனை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிப்பு
கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுக் பொருட்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழங்கியுள்ளது. அந்தவகையில், கிளிநொச்சி, திருநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உலருணவுகள் இன்று (வியாழக்கிழமை) வழங்கிவைக்கப்பட்டன. இந்த உணவுப் பொதிககளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார், கஜேந்திரன், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் குறித்த பகிர்ந்தளித்தனர். நோர்வேயில் உள்ள தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி சமூகத்தின் நிதி உதவியுடன் குறித்த பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தொடுகிறது!
வடக்கில் ஏற்பட்டுள்ள வெள்ள இடரால் 28 ஆயிரத்து 806 குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று மாலை தெரிவித்தது. புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் கடும் மழை பெய்து வருகிறது. கடந்த 22ஆம் திகதி இரணைமடுக் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டன. இதனால் கிளிநொச்சியில் மிகப்பெரும் வெள்ள இடர்ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக […]
கொழும்பில் துப்பாக்கிச் சூடு ஒருவர் சாவு மூவர் காயம்!
கொழும்பு மோதரைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயமடைந்தனர். நேற்று புதன்கிழமை காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம், கொழும்பு மோதரை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் நால்வர்; படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பயனின்றி ஒருவர்; உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மோதரை ஹேனமுல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய தினேஸ் எரங்க என […]












