இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வாரம் ஒரு கேள்வி பதில் பகுதிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ” போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தை ஏற்கனவே ஜனாதிபதியுடன் சேர்ந்து பலரும் கூறிவிட்டார்கள். ‘எமது படையினர் தப்பேதும் செய்யவில்லை. அவர்கள் எந்த வித நீதிமுறைத் தண்டனைக்கும் உள்ளாவதற்கு நாங்கள் விடமாட்டோம்’ என்று ஜனாதிபதியே கூறியுள்ளார். அதன் அர்த்தம் […]
Category: செய்திகள்
வாக்கு வங்கிக்கு பாதகமாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் செயற்படாது: சுரேஸ்
வாக்கு வங்கிக்கு பாதகமான விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஒருபோதும் செய்யாது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவிதமான நிபந்தனையுமின்றி வழங்கப்பட்ட ஆதரவுடன் தற்போது புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கமே தனது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்தவேண்டும். இந்நிலையில் […]
முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது
முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் கடற்கரையினை பாரிய அலைகள் தாக்கியுள்ளதுடன், பல கரையோரக் கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் நகர்ந்து செல்லும் புயல் காரணமாக முல்லைத்தீவு கடலில் சீற்றம் அதிகரித்து காணப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால், முல்லைத்தீவின் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களின் வாடிகள், வலைகள் மற்றும் படகுகள் என்பன […]
எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென்கிறார் மைத்திரி!
ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. தனது உரையில் இராணுவத்தினரை சிறையில் அடைத்தமை, பிக்குகளின் ஆதரவை இழந்தமை, மத்திய வங்கி கொள்ளை, விஞ்ஞானப்பூர்வ அமைச்சரவை தெரிவை மீறியமை போன்ற காரணங்களே ரணில் தலைமையிலான அரசாங்கத்துடன் முரண்பட வைத்ததாக தெரிவித்துள்ளார். இதேவேளை முரண்பட்டுக் கொண்டிருப்பதால் நாடு பாதிக்கப்படும். எனக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டு வருவதாக சிலர் கூறுகின்றனர். என்னை சிறையில் அடைத்தாலும் நாட்டின் […]
சிங்கக்கொடி சம்பந்தனின் பதவி பறிபோகிறதா?
அரசியல் சதியின் மூலம், பெற்றுக்கொண்ட சிறிலங்காவின் பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதில் தோல்வி கண்ட, மகிந்த ராஜபக்சவின் கவனம் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீது திரும்பியுள்ளது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சி என்ற தகைமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச நேற்று பதவி விலகிய பின்னர், அவரது தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச பணியாற்றுவார் என்று தெரிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகவும், தினேஸ் குணவர்த்தன […]
சிறீலங்காவின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில்
சிறீலங்காவின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கான பதவிப்பிரமாணத்தை செய்து வைத்தார்.சிறீலங்கா ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதனுாடாக கடந்த ஆறு வாரகாலமாக சிறீலங்காவில் நீடித்த அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் மகிந்த – சுனந்த தேசப்பிரிய
சிங்கள பௌத்த இனவாதத்தை மகிந்த ராஜபக்ஷ கையிலெடுக்கின்றார் என மனித உரிமை செயற்பட்டாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் குறித்து தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படும் கருத்துக்கள் அவர் தீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாராவதை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பை தனது பக்கம் இழுக்க முயன்ற […]
கூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனிமேல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டு வைத்துக் கொள்ளாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இரவு தமது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது கூறியிருந்தார். […]
அவமானப்பட்டு பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டார் மகிந்த
சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகி விட்டதாக, மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர் சற்று முன்னர். இதனைத் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் விஜேராம மாவத்தை இல்லத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில்,மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் தொடர்பாக அறிவித்துள்ளார். அந்த நிகழ்வில், அவரது ஆதரவாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில், பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, மகிந்த ராஜபக்சவுக்கு ஆசி வழங்கும் பௌத்த மத அனுஷ்டானங்கள் […]
நாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, நாளை பதவியில் இருந்து விலகவுள்ளார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய விட்டு, மகிந்த ராஜபக்ச நாளை பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளார். நாட்டின் உறுதி நிலையை உறுதிப்படுத்துவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று, நாமல் ராஜபக்ச கீச்சகப் பதிவில் கூறியுள்ளார். அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் மனு மீது இடைக்கால தடை உத்தரவு […]
மூவின மக்களுக்கும் ஜனாதிபதி துரோகமளித்துவிட்டார் – விஜயகலா
நாட்டில் உள்ள மூவின மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகமிழைத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் அரசியலமைப்பிற்கு முரணானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றின் ஏழு நீதியரசர்கள் அடங்கிய குழாம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்தோடு ஓரிரு நாட்களில் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்பார் என்றும் அவர் கூறியிருந்தார். நாடாளுமன்ற கலைப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றின் நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டு இந்த […]
யேர்மனியில் நடைபெற்ற “70 ஆண்டுகள் மனிதவுரிமை சாசனம்” மாநாட்டில் தமிழ் இளையோர்கள் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்து.
மனிதவுரிமை சாசனம் தொடர்பான பொது அறிவிப்பு 10.12.1948 ஆண்டு முன்வைக்கப்பட்டது. மனிதவுரிமை சாசனம் இனம் மொழி நிறம் பால் அனைத்தையும் கடந்து உலகில் வாழும் அனைத்து மக்களும் அடிப்படை உரிமைகளோடு மரியாதையுடனும் , சமாதானத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்கு உறுதியளிக்கின்றது. இருப்பினும் மனிதவுரிமைகளை பற்றி பறைசாற்றும் பல நாடுகள் அதே மனிதஉரிமைகளை மீறுகின்றது.உலகளாவிய ரீதியில் மக்கள் மீதான அடக்குமுறை வன்முறை தொடர்கின்றது. இக் காரணத்தின் பின்னணியில் நேற்றைய தினம் யேர்மனியின் தலைநகர் பேர்லின் மாநகரத்தில் பசுமை கட்சியின் ஏற்பாட்டில்” […]












