தெற்கிலிருப்பது இனவாத அரசே:கஜேந்திரகுமார்!

யாழ்ப்பாணத்தினில் போராட்டகாரர்களை மைத்திரி சந்தித்தமை தென்னிலங்கையினில் தனக்கான ஆதரவினை திரட்டும் ஒரு அரசியல் உத்தியே.போராட்டத்தினில் ஈடுபட்டிருக்கும் மக்களிற்கு எதுவுமே கிட்டப்போவதில்லையென்பது அவரது பதில் மூலம் தெரிகின்றதென தெரிவித்தார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

போராட்ட களத்தினில் பதிவு இணையத்திற்கு வழங்கிய விசேட செவ்வியினில் மேலும் அவர் தெரிவிக்கையினில் இலங்கையின் சட்டமா அதிபர் இனவாத நோக்கிலேயே அரசியல் கைதிகளது வழக்குகளை தென்னிலங்கை சிங்கள நீதிமன்றங்களிற்கு மாற்றியுள்ளார்.அதே இனவாத அடிப்படையினில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.தனது பணியாளரான சட்டமா அதிபருக்கு உத்தரவை பிறப்பிக்க மைத்திரி விரும்பவில்லை.
கடந்த மூன்றாவது வாரமாக அரசியல் கைதிகளது போராட்டம் தொடர்கின்றது. அதேவேளை வெளியே மக்களது போராட்டங்களும் வடகிழக்கினில் தொடர்கின்றது.
தெற்கினிலிருப்பது தற்போது இருப்பதும் இனவாத அரசு தானென்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. யாழ்.இந்து கல்லூரி முன்பதாக ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்டிருந்தவர்களுடன் இலங்கை ஜனாதிபதி மைத்திரி பேச்சு நடத்தியிருந்தது தெற்கினில் தனது ஆதரவு புலத்தை பலப்படுத்தும் நடவடிக்கையொன்று மட்டுமே.
உண்மையினில் தமிழ் மக்கள் மீது நம்பிக்கை கொண்டவரெனில் இவ்வளவு மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையினில் அதற்கு மதிப்பளித்து தீர்வொன்றனை தந்திருக்கமுடியும்.சாதாரணமாக ஜனாதியால் பிறப்பிக்கக்கூடிய உத்தரவொன்றை கூட பிறப்பிக்க தயாராக இல்லாத ஜனாதிபதியும் அவரது இனவாத அரசுமே ஆட்சியிலிருப்பது மீண்டும் இன்று உறுதியாகியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இறையாண்மை
ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை மேற்கோள் காட்டி எம்.ஏ.சுமந்திரன் கூறுவது அப்பட்டமான பொய்யென தமிழ்த்
ஒற்றையாட்சி முறைமையிலும், பிரிந்து செல்லக் கூடிய தன்மை இருப்பதால் அந்த சொற் பிரயோகத்தை மாற்றி சிங்கள மொழியில் மிகவும் இறுக்கமாக

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*