தமிழரசுக் கட்சியின் அடுத்த முதல்வர் யார் தெரியுமா? சி.வி.கே.சிவஞானம் பதில்!

இனிவரும் காலங்களில் வடமாகாண முதலமைச்சராக இறக்குமதிகளைக் கொண்டுவரப்போவதில்லையென தமிழரசுக் கட்சி முடிவெடுத்துள்ளதாக வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக பிரதம நீதியரசன் ஸ்ரீபவனை நியமிப்பதற்கு தமிழசுக் கட்சி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஊடகங்களில் சில செய்திகள் ஊகத்தின் அடிப்படையில் வெளிவருகின்றன. இருப்பினும் இறக்குமதிகளின் அனுபவம் தமிழரசுக் கட்சிக்கு உண்டு.

இனிவரும் காலங்களில் எந்தத் தேர்தலாக இருந்தாலும் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில், இந்த மண்ணிலே எங்களோடு நின்று, கட்சியோடு நின்று, கட்சியோடு பாடுபட்டவர்கள்தான் தேர்தல்களில் பங்குபற்றலாம்.

ஸ்ரீபவனுக்காக நான் இந்தக் கருத்தைக் கூறவில்லை. பொதுவாகவே வெளியிலிருந்து வருபவர்கள் யாரையும் நாம் இனிவரும் காலங்களில் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளப்போவதில்லையெனத் தெளிவாக முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்