சிறீலங்கா சென்றுள்ள ஜ.நா குழு இராணுவ முகாம்களுக்குள்ளேயும் சோதனை

சிறிலங்காவில் பயணம் மேற்கொண்ட சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழு, இராணுவ முகாம்கள், தடுப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் நால்வர் முதல் முறையாக சிறிலங்காவில் ஆய்வுப் பயணத்தை கடந்த 2ஆம் நாள் மேற்கொண்டனர். நேற்றுடன் இந்தக் குழுவினரின் சிறிலங்கா பயணம் நிறைவடைந்தது. இந்தப் பயணம் தொடர்பாக, நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட குழுவின் தலைவர், விக்டர் சகாரியா, “இந்தப் பயணத்தின் போது எமக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. தடுப்பு […]

கோத்தபாயவுக்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு!

முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வில் தொட­ரப்­பட்ட வழக்­கி­னைப்­போல் பிரித்­தா­னி­யா­வி­லும் வழக்­கு­க­ளைத் தொடர்­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் உள்­ள­தாக உண்மை மற்­றும் நீதிக்­கான அமைப்­பின் பணிப்­பா­ள­ரும் மனித உரி­மை­கள் செயற்பாட்டா­ள­ரு­மான யஸ்­மின் சூக்கா தெரி­வித்­தார். இலங்­கை­யின் முன்­னாள் பாது­காப்பு செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக அமெ­ரிக்­கா­வில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. சித்திரவதைகளை அனு­ப­வித்த நூற்­றுக்கு அதி­க­மா­னோர் பிரிட்டனிலும் புலம்­பெ­யர்ந்து வாழ்­கி­றார்­கள். அந்­த­வ­கை­யில் சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பில் பிரிட்­ட­னி­லும் வழக்குகளைத் தொடர்­வ­தற்­கான சாத்தி­யக்­கூ­று­கள் உள்­ள­னவா என லண்­ட­னில் இடம்­பெற்ற ஊடக மாநாட்­டி­னைத் […]

சிறீலங்கா அரசுடன் ஒன்றிணைந்து தமிழரை அடக்க நினைக்கிறதா யேர்மனிய அரசு?

அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் சாட்சியமென இலங்கை அரசு கூறிவருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அங்கத்தவர் எனக் கூறப்படும் ஒருவருக்கு எதிராக ஜேர்மனிய நீதிமன்றமொன்றில் போர்க் குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. 37 வயதான பீ. சிவதீபன் என்பவருக்கே இக்குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைந்து போராடிய காலத்தில், கைது செய்யப்பட்ட 15 அரச படையினரின் கொலைகள் சம்பந்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. […]

அதிபர் தேர்தலை பிற்போடும் முயற்சிக்கு எதிராக பீரிஸ் போர்க்கொடி

அதிபர் தேர்தல் நடத்துவதை பிற்போடுகின்ற எந்த முயற்சிகளையும் அனுமதிக்க முடியாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “ சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் அவரது பெயரையும், நிறைவேற்று அதிகார அமைப்பையும் கெடுக்கின்றனர். சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று, உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்பது குறித்து ஆராயப்படுவதாக சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர கூறியிருக்கிறார். […]

இன அழிப்பின் நீதிக்கான போராட்டம்

எந்த ஒரு தேசத்திற்கும் இறுதியாக இரண்டு மூலவளங்கள் காணப்படுகின்றன. அந்த தேசத்தின் காணிகளும் அதன் மக்களுமே அந்த மூலவளங்கள் ஆகும். இந்த மூலவளங்களே ஒரு தேசத்தின் அங்கீகாரத்தின் அடிப்படை. அந்த வகையில் இவ் மூலவளங்களை இல்லாதொழிக்கின்ற அல்லது தமிழ் இனப் பரம்பலை மாற்றியமைக்கின்ற செயற்பாடுகளைத்தான் மாறி மாறி வருகின்ற எல்லா சிறிலங்கா அரசுகளும் மேற்கொள்கின்றன. தமிழ்மக்களை இல்லாதொழிக்க பல்வேறுபட்ட திட்டமிட்டட இன அழிப்புக்களை நிகழ்த்தி காட்டிய அரசுகள் இப்போது சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் தமிழ் மக்களின் […]

அமமுக வெற்றி பெற்றால்… அதிமுக, திமுகவுக்கு ஆதரவு இல்லை – டிடிவி தெரிவிப்பு

சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் அதிமுக, திமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் மோதுகின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பரிசு பெட்டி சின்னத்தில், எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. மாநிலம் முழுவதும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து, டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நாகை மக்களவை தொகுதி […]

மரணதண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – ஐரோப்பிய ஒன்றியம்

ஐக்கிய நாடுகள் சபையில் இணக்கம் தெரிவித்தமைக்கு அமைய, இலங்கை அரசு மரணதண்டனையை தொடர்ந்தும் இடைநிறுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 43 வருடங்களின் பின்னர் இலங்கையில் மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவாக அதிகரித்துவரும் போதைப்பொருள் கடத்தல் உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளுக்கும் பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்வதாகவும் இதற்கு […]

பாசிசத்தினை ஒழிக்க பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் – மே பதினேழு இயக்கம்

பாசிசத்தினை வீழ்த்த பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் எனும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. 3 வாரங்களுக்கும் மேலாக சிறை உணவின் தாக்கத்தின் காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்த தோழர் திருமுருகன் காந்தி சிகிச்சை முடித்து வந்து இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார். கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள மக்கள் விரோத மசோதாக்கள் பற்றியும், இந்துத்துவ பயங்கரவாதம் ஜனநாயகத்தினை சீரழித்துக் கொண்டிருப்பதைப் பற்றியும், மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் இனி இந்த நாட்டில் தேர்தலே […]

ஒரே மேடையில் சுரேஸ் மற்றும் வரதர்!

இந்திய தூதரகம் முன்னாள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் மும்முரமாகியுள்ளதுடன் வெற்றியையும் பெற தொடங்கியுள்ளது. அவ்வகையில் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் க.சற்குணநாதன் என்பவர்; எழுதிய “ஆழ்கடலும் அழகிய முகங்களும்” என்ற புத்தக வெளியீட்டில் வரதராஜப்பெருமாள்,சுரேஸ்பிறேமசந்திரன் இருவரும் 27 வருடங்களின் பின்னர் ஒன்றாக மேடையேறியுள்ளனர். கடந்த 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டில் தலைமையுரையை வராஜப்பெருமாள் ஆற்ற, ஆய்வுரையை சர்வேஸ்வரனும் , கருத்துரையை சுரேஸ் பிரேமச்சந்திரனும வழங்;கியிருந்தார்கள். . இறுதியாக […]

கோத்தாவுக்கு எதிரான வழக்கு – ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்க சட்ட நிறுவனம்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பான அறிவித்தல் ஆவணங்கள் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான ஒளிப்பட ஆதாரம் வெளிவந்துள்ளது. கலிபோர்னியாவின் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்த வழக்குத் தொடர்பாகவும், சித்திரவதையால் பாதிக்கப்பட்ட கனேடியத் தமிழர் றோய் சமாதானம் சார்பில் அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தாக்கல் செய்த வழக்குத் தொடர்பாகவும் நேற்று முன்தினம் கோத்தாபய ராஜபக்சவிடம் முறைப்படி அறிவிக்கப்பட்டது. தெற்கு […]

நீ உலக மகா நடிகன்டா?

இலங்கையில் உலக மகா நடிகர்கள் இடத்தினை பெற கூட்டமைப்பினர் முதல் தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் போட்டிபோட்டுவருவது தெரிந்ததே. கொலைகளினையும் காணாமால் போதல்களையும் தலைமை தாங்கி அரங்கேற்றிய டக்ளஸ் முதல் வரதராஜப்பெருமாள்,சித்தார்த்தன் வரை இப்போது மனித உரிமைகள் வாதிகளாகியுள்ள நிலையில் மறுபுறம் கூட்டமைப்பினரோ வெட்கமின்றி நடிகர்களாகியுள்ளனர். இலங்கையின் முப்படைகளிற்கும் முன்னுரிமை வழங்கி கொண்டுவரப்பட்ட வரவு செலவுதிட்டத்திற்கு கைதூக்கி ஆதரவளித்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான மேஜர் பசீலன் அவர்களின் தாயாருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியதை […]

சிவில் பாதுகாப்பு ஊழியர் கொலை!

முல்லைதீவில் இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும்பெண்ணொருவர் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் நேற்றையதினம் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறில் கணவன் மனைவியை கத்தியால் கழுத்தில் வெட்டிக்கொன்றுள்ளார். குறித்த சம்பவத்தில் வெட்டிக் கொல்லப் பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான 44 வயதுடைய ஜெயா என்று அழைக்கப்படும் வி காந்தரூபி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கணவன் தலைமறைவாகி உள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பொலீசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த […]