தடை தாண்டி யாழ்.பல்கலையில் மாவீரர் தினம்!

இலங்கை அரசினது தடைகளை தாண்டி யாழ்.பல்ககையில் மாவீரர்களிற்கான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைகழகவளாகத்தில் உள்ள மாவீரார் நினைவு தூபியில் மாவீரார் நாள் நினைவேந்தலை நடாத்துவதற்கான சகல ஒழுங்குகளையும் பல்கலைக்கழக மாணவார்கள் நேற்றைய தினமே மேற்கொண்டிருந்தனர். எனினும் இன்று மாணவர்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.எனினும் காவல் தடைகளை தாண்டி உள்ளே புகுந்த மாணவர்கள் நினைவு தூபி பகுதியில் சுடரேற்றி மலர் தூவி தற்போது அஞ்சலித்துக்கொண்டிருக்கின்றனர். மாவீரார் நாள் நினைவேந்தல் வடகிழக்கு மற்றும் புலம்பெயார் தேசங்களில் உணர்புபூர்வமாக அனுட்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில் […]

தடை உடையும், வரலாற்றுக் கடமையில் இருந்து தவறமாட்டோம், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உறுதி

எத்தகைய தடைகள் வந்தாலும், அவற்றை உடைத்தெறிந்து யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்படும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த யாழ். பல்கலைக்கழகம் எழுச்சிக் கோலம் பூண்டிருக்கின்றது. பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவுச் சதுக்கத்தில் மாவீர் தினம் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது. எழுச்சிக்கோலம் பூண்டது யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுச் சதுக்கம்… விடுதலைக்காகக் களமாடி மண்மீது உறங்கும் தமிழீழ தேசப் புதல்வர்களைச் சிந்தையில் இருத்தி வழிபடுவதற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தயாரான நிலையில், அதை தடுத்து […]

அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாரானது

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல மாவீர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின ஏற்பாடுகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளன. இதன்டி, முள்ளியவளை தேராவில் தேவிபுரம் இரணைப்பாலை

மாவீரர் நாள் நினைவேந்தலைக் குழப்ப யாழ். பல்கலை நிர்வாகம் கடும் முயற்சி – மாணவர்கள் பல்கலை வளாகத்துள் நுளைய இருநாள் தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு தடை விதித்து நாளைய பத்திரிகைகளில் பல்கலைக்கழக நிர்வாகம் விளம்பரம் வெளியிடுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நாளைய தினம் 27ஆம் திகதி மாவீரர் நாளை கடைப்பிடிக்க மாணவர்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி வெளியிட்டுள்ளார். இந்தப் பணி அவசர அவசரமாக இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. அனைத்துபீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வளாகத்தினுள் 27.11.2019 மற்றும் 28.11.2019 ஆகிய தினங்களில் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதனை இத்தால் அறியத்தருகின்றேன். மாணவர்கள் […]

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு – பிரித்தானியா

ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கிங்ஸ்பெரி லண்டன் எனும் இடத்தில் இன்று மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் மாவீரர்களது பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாவீரர் நினைவுகளை சுமந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பொதுச் சுடரினை மாங்குள சமரில் வீரகாவியமான லெப்.அழகு அவர்களின் சகோதரி சங்கேஸ்வரி ஏற்றிவைக்க தமிழீழ தேசிய கொடியினை வீரவேங்கை லெப்.கேணல் மனோஜ் அவர்களின் […]

கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தலல் நிகழ்வு அறிவித்தல்

யாழ் கோப்பாய் துயிலுமில்ல வணக்க நிகழ்வுகள் துயிலுமில்லம் அமைந்திருந்த இடத்திற்கு அண்மையில் இராச வீதியில் விசேடமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இடத்தில் 27-11-2019 புதன்கிழமை மாலை சிறப்புற நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளன. வடமராட்சி எள்ளன்குளம் வணக்க நிகழ்வுகள் வடமராட்சி பிரதேச வணக்க நிகழ்வுகள் 27-11-2219 புதன்கிழமை பருத்தித்துறை முனை பகுதியில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (முனை வெளிச்ச வீட்டிலிருந்து 500 மீற்றர் தொலைவில்) மேற்படி வணக்க நிகழ்வுகளுக்கு தாயக உறவுகள் அனைவரையும் அனைவரையும் அன்புடன் அழைக்ககின்றோம். மாலை 6.05 […]

நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

மாவீரர் தியாகம் எவ்வளவு போற்றுதலுக்குரியதோ அது போல மாவீரர் உறவுகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. இவர்களை மதிப்பளிக்க வேண்டியது நம் முதன்மையான கடமையில் ஒன்றாகும். அவ் வகையில் நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் 24-11-2019 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 7.30 மணியளவில் 32 A range view road, Mount Albert, Auckland 1025 எனும் இடத்தில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. முதல் நிகழ்வாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஈகச்சுடரினை […]

மாவீரர் தின எழுச்சிக்கு தயாராகின்றது தேசம்:சலசலப்புக்கள் வேண்டாம்!

மாவீரர் தினத்தை குழப்ப முற்படுகின்ற சிறுசம்பவங்களை முன்னிலைப்படுத்த வேண்டாமென பகிரங்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. 27ம் திகதிய மாவீரர் தினத்தைய நிகழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் தூண்டல் நடவடிக்கைகள் தொடர்பில் முன்னுரிமை வழங்கவேண்டாமென ஊடகங்களிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே முள்ளிவாய்க்காலில் மாவீரர் இ துயிலுமில்ல துப்பரவு பணியில் ஈடுபட்ட உழவு இயந்திர உரிமையாளர் இன்றையதினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். நாளை மறுதினம் மாவீரர் தினம் இடம்பெறும் நிலையில், மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே […]

மாவீரர்களை நினைவுகூர அச்சமின்றி அணிதிரளுங்கள்

மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (23) தெரிவிக்கையில், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் மாவீரர் நாள் நினைவுகூரல் தொடர்பாக மக்கள் மத்தியில் ஒரு பதற்றமான நிலை உருவாகியிருக்கின்றது. ஆனால் அவ்வாறான ஒரு பதற்றம் தேவையற்றதாகும். – என்றார்.

கிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்!

தேர்தல் முடிவுகளின் பரபரப்புகளுக்கு மத்தியிலும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் இடம்பெற்று வருகிறது.

மாவீரர் தினத்திற்கு தடையில்லை:சஜித்

தமிழ் மக்களுடைய உறவுகளை புலிகள் என்றோ அவர்களது உறவினர்கள் என்றோ பிரித்துப் பார்க்க முடியாது. அவர்கள் எல்லோரும் தமிழ்த் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். ஆயுதப் போரில் உயிரிழந்த தமது சகல உறவுகளையும் அமைதியான முறையில் நினைவுகூர்வதற்கு தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. அதைத் தடுப்பது மாபெரும் மனித உரிமை மீறல்.” இவ்வாறு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.