சஹ்ரானுக்கு சொந்தமான வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வசம்

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இலங்கை தலைவர் சஹ்ரானுக்குச் சொந்தமான வீட்டை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பெற்றுள்ளனர். தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற தெமட்டகொட – மஹவில கார்டினில் அமைந்துள்ள வீடே இவ்வாறு பொறுப்பேற்றுகொண்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தனர். இதேவேளை, தற்கொலை குண்டுதாரிகளின் 14 கோடி ரூபாய் பணமும் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு தொகை பணத்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் ஏனைய பணத் தொகை […]

வவுனியாவில் பூட்டியிருந்த வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கின

வவுனியா – மன்னார் வீதி, சாளம்பைக்குளம் பகுதியில் பூட்டியிருந்த வீடொன்றிலிருந்து அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையிலேயே குறித்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது, குறித்த வீட்டிலிருந்து அச்சுப்பிரதி செய்து லெமினேட் செய்யப்பட்ட பதினைந்து அடையாள அட்டைகள் மற்றும் சில ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன. குறித்த ஆவணங்களை, பூவரசங்குளம் பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர். இதேவேளை, இது குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறைக்கு தகவல் வழங்கிய இஸ்லாமிய இளைஞன் அடித்துக் கொலை!

அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இஸ்லாமிய தீவிரவாத குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இஸ்லாமியா் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மொஹமட் ஹாதில் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் பிரதேசத்தில் வடை விற்பனை செய்து வந்தவர் எனவும் காவல்துறையினர் மேலும் கூறியுள்ளனர். தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த அந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாதிகள் நடவடிக்கைகள் குறித்து பல தகவல்களை பொலிஸாருக்கு தகவல்களை வழங்கி வந்துள்ளார். எனவே […]

“இந்த நூற்றாண்டின் தமிழ்வெளியில் திகழ்பவர் பிரபாகரன்” வைரமுத்து அதிரடி பேச்சு!

இந்த நூற்றாண்டின் தமிழ் வெளியில் திகள்பவர் ஒன்று பெரியார் இன்னொருவர் பிரபாகரன் என்று புகழ்ந்து பேசியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் இடம்பெற்ற தமிழாற்றுப்படை நிகழ்வில் கலந்துகொண்டு தந்தை பெரியார் பற்றி கவிதை படைத்த கவிப்பேரரசு வைரமுத்து இறுதியில் முடிக்கும்போது இக்கருத்தை வெளியிட்டிருந்தார். அப்போது அரங்குநிறைய கரவொலியும் கூச்சலும் நிறைந்தது.அதேவேளை அந்த அரங்கில் அதிகம் திமுக அபிமானிகள் இருந்தும் அவர்களின் தலைவர் கருனாநிதியின் பேரை சொல்லாதது பலருக்கு வருத்தத்தையும், சலசலப்பும் ஏற்படுத்தியிருந்தது.

யாழில் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கை

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் நாடு முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் பொது இடங்களில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.இதன்போது பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு வர்த்தக நிலையங்கள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்கவே பல்கலை. மாணவர்கள் கைது

தமிழினப் படுகொலை – முள்ளிவாய்க்கால் – நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே சிறிலங்கா அரசு யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மாணவர்களின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கும் போராட்டங்கள் மற்றும் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் […]

தேடுதல் தொடர்கிறது?

இலங்கையின் வடக்கு தெற்கென அனைத்து பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றது. யாழ்ப்பாணம் ஜிம்மா பள்ளிவாசல் மற்றும் அதை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு வர்த்தக நிலையங்கள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை தெற்கில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து வெலிமடை போகஹகும்புர பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் வெளிநாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் […]

யாழ். பல்கலைக்கழக சுற்றிவளைப்பில் கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் நேற்று சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவத்தினர் யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும், விடுதிகளிலும் பாரிய சோதனைகளை முன்னெடுத்தனர். நூற்றுக்கணக்கான சிறிலங்கா படையினர் இந்த தேடுதலில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்களின் வேண்டுகோளை அடுத்தே இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தேடுதலின் போது, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படம், மற்றும் […]

வடக்கில் இராணுவ பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரவில்லை – மாவை சேனாதிராசா

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து வடக்கில் இராணுவ பாதுகாப்பை பலப்படுத்துமாறு தான் கோரவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, வடக்கு, கிழக்கில் இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் தாம் கோரியதாக வெளியான செய்திகளை அவர் நிராகரித்துள்ளார். “ஐஸ்எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள, இந்த தாக்குதல்களில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதால், வடக்கு கிழக்கில் உள்ள மக்களைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதற்காக, அனைத்துலக […]

குண்டைப் பொருத்தி விட்டு தப்பினார் சஹ்ரான்? – புலனாய்வு அமைப்புகள் சந்தேகம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், ஷங்ரி-லா விடுதி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள புலனாய்வு அமைப்புகள், அவர் உயிருடன் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஷங்ரி-லா விடுதி தற்கொலைக் குண்டுவெடிப்பில் உயிரிழந்தாரா என்பது தொடர்பாக, புலனாய்வு அமைப்புகள் இன்னமும் சந்தேகம் கொண்டுள்ளன. இந்த தாக்குதலுக்காக தற்கொலைக் குண்டுதாரி ஒருவருடன் சஹ்ரான் ஷங்ரி-லா விடுதிக்கு வந்தார் என்றும், ஆனால், சஹ்ரான் குண்டைவெடிக்க வைத்து தற்கொலை […]

மூக்கை நுழைத்த இந்தியா! முகநூல் எங்கும் தலைவர் படம்!

தமிழீழ தேசியத்தலைவரின் ஒளிப்படங்களை முகநூல்களில் இருந்து அகற்றும் நடவடிக்கை முகநூல் நிர்வாகம் தொடங்கியுள்ளமை தமிழ் உணர்வாளர்களிடையே அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முகநூல் நிர்வாகத்திடம் இந்திய ஊடகம் கருத்து கேட்ட்டபோது விடுதலை புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் எனவும் , இந்தியாவில் தடைசெய்தும் இருப்பதனால் எங்கள் விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லாததால் ஒளிப்படங்களை எடுக்கிறோம்’ என விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்திய அரசாங்கம் சமூக வலைதளங்களின் அதிகாரிகளை அழைத்து இதுதொடர்பாக ஆலோசனைகளை நடத்தியதாகவும் இவ்வாறான தங்கள் அரசுக்கு […]

பல்கலைக்கழக மாணவர்கள் கைதின் பின்னணியில் சுமந்திரன் !!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரின் கைதின் பின்னணியில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற ஐந்து மாத காலத்துள் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவும் அவர்களோடு ஒட்டி உறவாடி ஆதரவு அளித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எதிராக பாரிய அளவில் மக்களை ஒன்றுதிரட்டி பெரும் போராட்டங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார்கள். இது ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் […]