36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேரைக் காணவில்லை

சிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து, கொல்லப்பட்ட 11 வெளிநாட்டவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியர்கள் மூவர், போர்த்துக்கல் நாட்டவர் ஒருவர், துருக்கியர்கள் இருவர், பிரித்தானியர்கள் மூவர், பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்படாமல் 25 […]

குண்டுவெடிப்புகளில் பலியானோர் தொகை 290 ஆக உயர்ந்தது

சிறிலங்காவில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் தேவாலயங்களிலும், ஆடம்பர விடுதிகளிலும், நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. கொழும்பில் 1000 இராணுவத்தினர் இந்த தாக்குதல்களை அடுத்து, கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1000 இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 24 கைது நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் […]

தெமட்டகொட குண்டுவெடிப்பில் 3 சிறிலங்கா காவல்துறையினர் பலி

தெமட்டகொட பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் மூவர் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தெமட்டகொடவில் உள்ள மகாவில வீடமைப்புத் திட்ட, அடுக்குமாடிக் குடியிருப்பில், வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடம் ஒன்றை சோதனையிட முயன்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. காவல்துறையினர் வீட்டுக்குள் நுழைந்த போது அங்கிருந்த தற்கொலைக் குண்டு தாரி என சந்தேகிக்கப்படும் நபர் குண்டை வெடிக்க வைத்துள்ளார். இதில் மூன்று காவல்துறையினர் உயிரிழந்தனர். இன்றைய குண்டுத் […]

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்குள் 26 சடலங்கள்

கொழும்பு- கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய வளாகத்தில் 26 பேரின் சடலங்கள் கிடப்பதாக சிறிலங்கா காவல்துறையினரை மேற்கொள்காட்டி, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் அவர் இந்த தகவலை வெளியிட்டார். தாம் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், சிறிலங்கா பிரதமர் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்புகளில் 9 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 185 பேர் பலி – 469 பேர் காயம்

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில், 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிந்திக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் மூன்று ஆடம்பர விடுதிகளிலும், கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றில், ஒரே நேரத்தில் இன்று காலை குண்டுகள் வெடித்தன. இந்தச் சம்பவத்தில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, 469 என்று மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களில் ஒன்பது பேர் […]

தற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல் – விசாரணைகளில் தெரியவந்தது

சிறிலங்காவில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கொழும்பில் ஷங்ரி-லா விடுதியில் நேற்று இரண்டு பேர் 616ஆவது இலக்க அறையில் தங்கியுள்ளனர். குறித்த இரண்டு சந்தேக நபர்களுமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் மண்டபத்தில் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர் என்பது கண்காணிப்பு காணொளிப் பதிவில் இருந்து தெரிய வந்துள்ளது. ஷங்ரி- லா விடுதி குண்டுவெடிப்புக்கு 25 கிலோ எடையுள்ள சி-4 […]

சமூக வலைத்தளங்கள் முடக்கம்

நாட்டின் பல பாகங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், சற்றுமுன்னர் முதல், சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. பேஸ்புக், மெசென்ஜர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சமூக வலைத்தளங்களினூடாக பொய்ப் பிரசாரங்கள் முன்​னெடுக்கப்படுவதாலேயே, இவை முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு

நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜனாதிபதி பணித்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விசேட பொலிஸ் ஊரடங்குச் சட்ட அமுலின் போது, விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் இளைஞரணி தலைவராக சேயோன் தெரிவு

தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி தலைவராக மட்டக்களப்பை சேர்ந்த கி.சேயோன் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுரேன் தெரிவாகினார். இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடந்த இளைஞர் அணி நிர்வாக தெரிவில் இந்த தெரிவுகள் இடம்பெற்றன. இம்முறை இணை பொருளாளர்களாக இருவர் தெரிவாகினர். மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனிற்கு இம்முறை இளைஞர் அணியில் முக்கிய பொறுப்புக்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும், கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பையடுத்து, அவர் எந்த பொறுப்பிலும் நியமிக்கப்படவில்லை.

புலிகளின் காணிகளை அபகரிக்கும் சிறிதரன்!

விடுதலைப் புலிகளின் காணிகளை தனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு பெயர் மாற்றம் செய்துவருகின்றார் என தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்திருந்தன. இந்நிலையில் தனது மகனின் பெயரில் அண்மையில் கிளிநொச்சியில் 10 ஏக்கரிற்கும் அதிகமான நிலத்தினை பெயர் மாற்றம் செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. குறித்த காணிகள் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டுவந்திருந்த நிலையில் அவற்றினை இலங்கை அரசாங்கம் கையகப்படுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே அவை சிறதரனின் மகனின் பெயரிற்கு கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. […]

முல்லைத்தீவில் ஊடகவியலாளா் கைது..!

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் சற்றுமுன்னர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பிரச்சனையினை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு அச்சுறுத்தும் நடவடிக்கையில் பொலீசார் மற்றும் படையினர்,படைபுலனாய்வாளர்கள் ஈடுபட்டுவருகின்றார்கள். இது தொடர்பில் ஊடக அமைப்புக்கள் பல தெரியப்படுத்தியும் எதுவித முன்னேற்றமான நடவடிக்கையும் இல்லாத நிலை தற்போதும் தொடர்ந்து வருகின்றது.இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த […]

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி நடைபெறும் நடைபவனியில் சகல மக்களையும் கலந்துகொள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் கோரிக்கை

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகத்தை ஒரு முழுச்செயலகமாக மாற்றித்தருமாறு கோரி தமிழ் மக்கள் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி நடைபெறவிருக்கும் நடைபவனியில் உண்மையையும் நியாயத்தையும் சமாதானத்தையும் விரும்பும் சகல மக்களையும் கலந்துகொள்ளுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி. வி விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நடைபவனியில் தானும் பங்கேற்ப இருப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் இதுதொடர்பில் அறிக்கை ஒன்றை […]