மாவீரர் தினத்தை முன்னிட்டு தனது சுடரேற்றல் பயணத்தை கே.சிவாஜிலிங்கம் ஆரம்பித்துள்ளார்.முன்னதாக யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக இராச பாதை வீதியில் இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த காணியில் தற்போது படையினர் பாரிய இராணுவ முகாம் ஒன்றினை அமைந்துள்ளனர் .இதனாலேயே […]
Author: இலக்கியன்
தடை தாண்டி யாழ்.பல்கலையில் மாவீரர் தினம்!
இலங்கை அரசினது தடைகளை தாண்டி யாழ்.பல்ககையில் மாவீரர்களிற்கான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைகழகவளாகத்தில் உள்ள மாவீரார் நினைவு தூபியில் மாவீரார் நாள் நினைவேந்தலை நடாத்துவதற்கான சகல ஒழுங்குகளையும் பல்கலைக்கழக மாணவார்கள் நேற்றைய தினமே மேற்கொண்டிருந்தனர். எனினும் இன்று மாணவர்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.எனினும் காவல் தடைகளை தாண்டி உள்ளே புகுந்த மாணவர்கள் நினைவு தூபி பகுதியில் சுடரேற்றி மலர் தூவி தற்போது அஞ்சலித்துக்கொண்டிருக்கின்றனர். மாவீரார் நாள் நினைவேந்தல் வடகிழக்கு மற்றும் புலம்பெயார் தேசங்களில் உணர்புபூர்வமாக அனுட்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில் […]
தடை உடையும், வரலாற்றுக் கடமையில் இருந்து தவறமாட்டோம், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உறுதி
எத்தகைய தடைகள் வந்தாலும், அவற்றை உடைத்தெறிந்து யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்படும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த யாழ். பல்கலைக்கழகம் எழுச்சிக் கோலம் பூண்டிருக்கின்றது. பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவுச் சதுக்கத்தில் மாவீர் தினம் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது. எழுச்சிக்கோலம் பூண்டது யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள மாவீரர் நினைவுச் சதுக்கம்… விடுதலைக்காகக் களமாடி மண்மீது உறங்கும் தமிழீழ தேசப் புதல்வர்களைச் சிந்தையில் இருத்தி வழிபடுவதற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தயாரான நிலையில், அதை தடுத்து […]
பரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!
பிரான்சில் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பொதுமக்கள்,வர்த்தகர்கள் ஈடுபட்டதைக் காணமுடிந்தது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை பல்வேறு வண்ணங்களில் கட்டிகைகளை உணர்வோடு வெட்டி உண்டு மகிழ்ந்தனர்.
அனைத்துக் கட்சிளையும் அணி திரள அழைக்கிறோம்!
சிங்கள வேட்பாளரை சுட்டிக்காட்ட முடியாது என்று மறைமுகமாக தமிழ் வேட்பாளரை சுட்டிக்காட்டிய சிலர் உள்ளனர். ஆனால் எது சரி என்ற முடிவை மக்கள் எடுத்தனர். அந்த தீர்மானத்தை நாமும் எடுத்தோம். இந்த வாக்களிப்பு முறையை இனத்துவேசமான அல்லது இனரீதியான வாக்களிப்பு என்று தென்னிலங்கையில் பலர் கூற முனைகின்றனர். அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (26) மதியம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை […]
மாவீரர் நாள் நினைவேந்தலைக் குழப்ப யாழ். பல்கலை நிர்வாகம் கடும் முயற்சி – மாணவர்கள் பல்கலை வளாகத்துள் நுளைய இருநாள் தடை
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு தடை விதித்து நாளைய பத்திரிகைகளில் பல்கலைக்கழக நிர்வாகம் விளம்பரம் வெளியிடுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நாளைய தினம் 27ஆம் திகதி மாவீரர் நாளை கடைப்பிடிக்க மாணவர்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி வெளியிட்டுள்ளார். இந்தப் பணி அவசர அவசரமாக இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. அனைத்துபீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வளாகத்தினுள் 27.11.2019 மற்றும் 28.11.2019 ஆகிய தினங்களில் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதனை இத்தால் அறியத்தருகின்றேன். மாணவர்கள் […]
மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு – பிரித்தானியா
ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கிங்ஸ்பெரி லண்டன் எனும் இடத்தில் இன்று மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் மாவீரர்களது பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாவீரர் நினைவுகளை சுமந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பொதுச் சுடரினை மாங்குள சமரில் வீரகாவியமான லெப்.அழகு அவர்களின் சகோதரி சங்கேஸ்வரி ஏற்றிவைக்க தமிழீழ தேசிய கொடியினை வீரவேங்கை லெப்.கேணல் மனோஜ் அவர்களின் […]
2019 ஆண்டுக்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல்!
தமிழ் மக்கள் தமது முடிக்குரிய ஆட்சி நிலத்தை பாதுகாத்துக் கொள்ளவும், அந்த நிலத்தில் தங்களுக்கே உரித்தான மொழி கலை கலாசாரம் மரபுரிமைகளை நிலை நிறுத்திக் கொள்ளவும், ‘தமிழீழத் தனியரசு’ ஒன்றை நிறுவுவோம் எனும் உன்னதமான இலட்சிய வேட்கையோடு களமாடி, சந்தனப் பேழைகளாகத் துயில் கொள்ளும் தமிழ்த் தேசிய இனத்தின் வீர ஆத்மாக்களை அஞ்சலித்து மதிப்புறுத்தும் தமிழர் தேசத்தின் வழிபாட்டு முறை பண்பாட்டுத் தொடர்ச்சியை, 2009 க்குப் பின்னரான நெருக்கடியான கால கட்டத்திலும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு […]
ஈழதேசத்து மன்னவனை பாடிடுவோம்
வல்லவை தந்த வல்லவனே! நீங்கள் சொன்னவை யாவும் தமிழினப் பற்றே! கற்றவை முழுதும் தமிழ் உணர்வே! சிந்தையில் என்றும் நிலைப்பதே தமிழீழமே! வரி உடையில் வாழ்த்திருப்பாய் வரிப்புலியாக பல போர்க்களங்கள் திறந்திருப்பாய் கரிகாலப் பெரு வள்ளலே – நீங்களே கலிகாலம் தகர்க்கும் ஈழ மன்னவனே! மாவீரர் ஒவ்வொருவரையும் நேசிப்பாய் மாதவம் புரிந்த புனிதர்களென பூசிப்பாய் மாறாத கொள்கை கொண்ட தமிழனே! மறவோமா உந்தன் அழகு வதனமதை படை நகர்த்தும் பாணியும் அழகு தடை தகர்க்கும் திறனும் அழகு […]
பிரபாகரன் இவருக்கு இணை, இவரே!
அதிநீள காலத்துககு ஓருமுறை, ஒர் தேசிய இனத்தின் மீட்சிக்காய், அந்த, இனத்தில் ஓர் அருந்தலைவர் உதிப்பார் என்பார்கள் அதுபோல், வேயுயர்வரீமா நுடப்ம் திணிந்தவராய், எம் துயர் வாழ்விடைத் தோன்றிய, தமிழீழ தேசத்தின் மாதலைவர், மேதகு வே. பிரபாகரன் அவர்களை தமிழ் இனத்தினரின் சிந்தைகளில் நிலைத்த அந்த, நற்திறல் வேந்தனை, அவர்தம் பண்பினிற் சிறுதுளியை.. எடுத்து, வரிவடித்துப் பார்க்கின்றோம். கண்ணியம் கடைமை கட்டுப்பாடு என்னவென்று காட்டி நிலைநாட்டிய திடமனம் உடையதோர் செம்மல், பகையஞ்சும் தகை மிகு வீரராய் வீற்றிருந்து, […]
ஜெனிவா தீர்மானத்துக்கான ஆதரவு மீள்பரிசீலனை – சிறிலங்கா அறிவிப்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் இணை அனுசரணையுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்து நிறைவேற்றிய, சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, 30/1 தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட ஆதரவை முழுமையாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் இடைக்கால அரசின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தினேஸ் குணவர்த்தன நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “சிறிலங்கா இந்த தீர்மானத்தை தேசிய நோக்கில் அதை சீரான மற்றும் பாகுபாடற்றதாக […]
யாழ் பல்கலையில் தேசியத்தலைவர் பிறந்தநாள்
தமிழீழத் தேசியத் தலைவரின் 65வது அகவை தினத்தினை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரத்தியேகமாக கொண்டாடியுள்ளனர்.












