கிழக்கில் சோதனை சாவடி!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புதிதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியை ஒரு தரப்பினர் கொண்டாடிய வேளையில், கல்முனை பகுதியில் வர்த்தக நிலையங்களை மூடப்பட்டதை காணமுடிந்தது. அத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) பிரதான வீதியில் இராணுவ சோதனை சாவடிகள் திடீரென அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினரும் பொலிஸாராரும் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று எட்டாவது நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் சனாதிபதி தேர்தலை முன்னிட்டு இராணுவத்தினர் முன்னர் அமைத்திருந்த சாவடிகளிலிருந்து மீள […]

கிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்!

தேர்தல் முடிவுகளின் பரபரப்புகளுக்கு மத்தியிலும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணிகள் இடம்பெற்று வருகிறது.

தமிழ் மக்கள் பாதுகாப்பான ஒரு சூழலை விரும்புகிறார்கள் – வாழ்த்துச் செய்தியில் சி.வி.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்கள் பாதுகாப்பான ஒரு சூழலை விரும்புகின்றார்கள் எனவும், தேர்தல் முடிவுகள் இந்நாட்டு மக்கள் இன ரீதியாக இரு துருவங்களாகப் பிரிந்திருப்பதை வெளிக்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சி.வி.விக்கேஸ்வரன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தியில், “நாட்டில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் இந்நாட்டு மக்கள் இன ரீதியாக […]

வாழ்த்து தெரிவித்த மோடி – விரைவில் சந்திக்க விருப்பம் வெளியிட்டார் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன வின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மோடி கீச்சகத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “எங்கள் இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், எங்கள் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்த்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து கீச்சகத்தில் […]

கலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம் – புதிய பிரதமராக தினேஸ்?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் ஆணைக்கு அடிபணிந்து, ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் 5 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில், மக்களின் ஆணையை ஏற்றுக் கொண்டு பதவி விலகும் முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் தானாகவே கலைக்கப்பட்டதாகி விடும். நாளை அதிபராகப் பதவியேற்றதும் […]

சனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது!

இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகளையே தமிழீழத்துக்கானதாக எடுத்துக்கொள்ளலாம் என பாமக தலைவர் மருத்துவர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்! இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. ஆம்…. தமிழினத்தின் எதிரியான கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது. இலங்கையில் நேற்று நடைபெற்ற 8-ஆவது […]

சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ச

நடந்து முடிந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச 13 இலட்சத்து ​60​ ஆயிரத்து 16 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இதன்படி, கோத்தாபய ராஜபக்ச 16 மாவட்டங்களையும், சஜித் பிரேமதாச 6 மாவட்டங்களையும் கைப்பற்றியுள்ளனர். மொத்த வாக்குகள் கோத்தாபய ராஜபக்ச – 6,924,255 (69 இலட்சத்து 24 ஆயிரத்து 255). சஜித் பிரேமதாச – 5,564,239 (55 இலட்சத்து 64 ஆயிரத்து 239). அநுர குமார திஸாநாயக்க – 4,18553 (4 இலட்சத்து […]

வாக்களிப்பு வீதம் உயர்கிறது

நடைபெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் சில மாவட்டங்களில் 2 மணி வரையில் 60% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம் – 55%, மன்னார் – 56.7%, முல்லைத்தீவு – 55.3%, திருகோணமலை – 65%, மட்டக்களப்பு – 54.7%, அநுராதபுரம் – 65%, பதுளை – 70%, அம்பாறை – 55%, நுவரெலியா – 60%, கண்டி – 70%, பொலனறுவை 72%, குருநாகல் – 60%, மாத்தறை – 65%, வவுனியா – 60%

வடக்கு சிறீலங்காவின் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இம்முறையும் வடக்கு வாக்களிப்பே தாக்கத்தை செலுத்துமென இந்திய தூதரக தகவல்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக தென்னிலங்கையில் வாக்களிப்பு வித்தியாசம் குறிப்பிட்டு சொல்லத்தக்கதாக இருக்கமாட்டாதென தெரியவருகின்றது.ஆகக்கூடியது இருதரப்பிற்குமான வாக்கு வித்தியாசம் சுமார் இரண்டு இலட்சம் வரை இருக்கலாமென கணிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கு வாக்குகள் கூடிய தாக்கத்தை செலுத்துமென தெரியவருகின்றது. 2015ம் ஆண்டைய தேர்தல் போன்று மைத்திரி பெற்ற வாக்குகளை வடக்கிலும் பெற்றால் சஜித்தின் வெற்றி உறுதியாகுமென அத்தரப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே கொழும்பை மையமாக வைத்து போலியான […]

ஜனாதிபதி தேர்தல்: ஈழத்தமிழர்களிடம் வைகோ முக்கிய வேண்டுகோள்!

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தமிழ் இனத்தின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு ஈழத்தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதை அறிந்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். எனவே, வாக்குச் சாவடிக்குப் போகும் முன்பு, […]

சஜித்தை எப்பொழுதும் தமிழர்கள் நம்பமுடியாது அமேரிக்க!

அமேரிக்காவின் வோசிஞ்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தி ஒன்றில் சிறிலங்காவில் நடைபெறும் சனாதிபதித் தேர்தலில் யார் வென்றாலும் தமிழ்மக்களின் நிலை பரிதாபகரமாகவே இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக யார்வென்றாலும் தோல்வியடைவது தமிழ்மக்களாகவே இருக்கும் என்ற வாசகத்தை அந்த செய்தியில் குறிப்பிட்டிருப்பது மேற்குலக அரசியலின் சூழ்ச்சி ஒன்றை குறிப்பதாக இருக்கின்றது. பிரேமதாசவை தமிழீழ விடுதலைப்புலிகள் கொன்றதாகவும் எந்த சூழ்நிலையிலும் சஜித் பிரேமதாசா பெரும்பான்மை அரச இயந்திரத்திற்கு எதிராக செல்வார் என நம்ப முடியாது எனவும் அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் […]

சஜித் தோல்வியடைந்தால் தமிழீழத் தனிநாடு கோருவதற்கு வாய்ப்பு ஏற்படும் – உண்மையைப் போட்டுடைத்த இரா.சம்பந்தன்!

வரும் 16.11.2019 சனிக்கிழமை நடைபெறும் சிங்கள தேசத்து அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோற்கடிக்கப்பட்டால் தமிழர்கள் தனிநாடு கோருவதற்கு சர்வதேச சட்டத்தில் இடமிருப்பதாக இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். நேற்று 13.11.2019 புதன்கிழமை யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்திய பொதுக் கூட்டத்திலேயே இவ் இன்ப அதிர்ச்சி அறிவித்தலை இரா.சம்பந்தன் வெளியிட்டதாக ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனின் காலைக்கதிர் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. இக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் அவர்கள் […]