ஜனாதிபதி நாட்டின் இறையாண்மை குறித்து பேசுகின்றார், ஆனால் இலங்கையின் இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. அவ்வாறு இருக்கையில் இறையாண்மையை முதன்மைப்படுத்தி போர் குற்றங்களை மறைக்கவோ சர்வதேச பொறுப்புக்களை கைவிடவோ முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் பேசும் போதே இதனை தெரிவித்தார். மேலும், “இலங்கை என்பது தேசிய நாடு. இங்கு இரு தேசிய இனங்கள் பிரதிநிதித்துவப் […]
Category: செய்திகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சுமந்திரன், சிறிதரன் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டன!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய பேச்சாளராக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனும் நாடாளுமன்ற குழுவின் புதிய கொறடாவாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் நேற்று (21) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்தத் தெரிவுகள் இடம்பெற்றன. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அவரின் இல்லத்தில் […]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை ரெலோவிற்கு வழங்கவேண்டும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை இம்முறை தங்களுக்கு வழங்கவேண்டும் என கூட்டமைப்பின் தலைவரிடம் கோருவதற்கு ரெலோவின் தலைமைக் குழு தீர்மானித்துள்ளது. ரெலோவின் மத்திய குழுக் கூட்டம் நேற்று (17) திருகோணமலையில் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்ற குழுவின் கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி கூடும் போது, நாடாளுமன்ற பேச்சாளர் தெரிவும் இடம்பெறுவது வழமையாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ரெலோ இம்முறை 3 ஆசனங்களையும், புளொட் ஒரு ஆசனத்தையும் […]
சுமந்திரனின் பதவிகள் பறிக்கப்படுகின்றனவா?
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து எம்.ஏ.சுமந்திரனை அகற்றி, புதியவர் ஒருவரை நியமிக்கும் நகர்வுகள் ஆரம்பித்துள்ளன. கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான மூன்று கட்சிகளின் தலைமைகளும் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைக்கவுள்ளன. ஓரிரு நாளில் தமது முடிவை மூன்று கட்சிகளும் கூட்டாக, கூட்டமைப்பின் தலைமையிடம் முன்வைக்கவுள்ளன. புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் 20ஆம் திகதி கூடவுள்ள நிலையில், அதற்கடுத்த ஓரிரு நாளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூடவுள்ளது. இதன்போது, இந்த விடயம் ஆராயப்படும். கடந்த பொதுத்தேர்தலில் கூட்டமைப்பின் […]
மணி தொடர்ந்து உறுப்பினராக இருக்க முடியும்
மணிவண்ணன் தொடர்பில் நாங்கள் 3 மணி நேரம் விவாதித்தோம். தமிழ்த் தேசிய முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்களில் மூவர் மணிவண்ணனைகட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள். ஏனையவர்கள் மணிவண்ணனை கட்சியில் இருந்து நீக்கலாம் என்பதற்கு அப்பால் அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே பேசியிருந்தார்கள். எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரையில் விடயங்களைப் பேசித் தான் முடிவெடுக்கிறோம். நான் ஒரு கருத்தை சொல்லும்போது அதை கண்ணை மூடிக்கொண்டு எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் […]
இணங்கி செயற்பட அழைப்பு?
தமது இனத்தின் நன்மை கருதி, தெரிவுசெய்யப்பட்டுள்ள எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன. இதற்கு ஒத்துழைப்பு வழங்க நானும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராக இருக்கின்றோம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இங்கு நான் அழுத்தம் திருத்தமாக கொள்கை அடிப்படையில் என்று குறிப்பிட்டிருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கை என்னவென்று குறிப்பிடவேண்டும். இணைந்த […]
கட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்
தமிழரசுக் கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவித்துள்ள கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (07.08.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் நாம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளோம் என்பது உன்மை. தமிழ் அரசு […]
கஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றமையினை முன்னிட்டு இன்று காலை 11.00 மணிக்கு அஞ்சலி நிகழ்வை நடாத்தினார்கள். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபன் தூபியில் இடம்பெற்ற நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் தியாகத் தீபம் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் மேலும் மலர் அஞ்சலி இடம்பெற்றது. இவ் அஞ்சலி நிகழ்வில் வேட்பாளர்களான செல்வராஜா கஜேந்திரன், க.சுகாஷ், திருமதி வாசுகி சுதாகர், க.காண்டீபன், டிலான் பத்மநாதன், ஆகியோருடன் கட்சி ஆதரவாளர்களும் செயற்பாட்டாள ர்களும் […]
கூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே?
கூட்டமைப்பு கடந்த காலத்தில் உரிமை அரசியலை தவிர்த்து சலுகை அரசியலை முதன்மைப்படுத்தி மேற்கொண்ட செயற்பாடுகளே இம்முறை தேர்தலில் கணிசமானளவு மக்கள் சிங்கள கட்சிகளுக்கும் அரசாங்க சார்பு தமிழ் கட்சிகளுக்கும் வாக்களிக்கும் நிலைமையை உருவாக்கியிருக்கின்றதென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதே தவறை மீண்டும் செய்து எமது 70 வருட கால போராட்டத்துக்கு சாவு மணி அடித்துவிடாதீர்கள எனவும் அவர் கோரியுள்ளார். வடக்கு- கிழக்கு ரீதியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. தலைவர் தம்பி […]
சுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்!
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் எண்ணும் நிலையத்தில் துரோகி சுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் மீது பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மோசமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அங்கு நின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவின் மகனும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான கலையமுதன் உட்பட பல இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், கலையமுதன் தள்ளி வீழ்த்தப்பட்டு மோசமாக தாக்கப்பட்டார். சுமந்திரனின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினரே இவர்களை […]
மக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் துரோகியாக இருந்து தமிழ் மக்களின் தியாகங்களை கொச்சைப்படுத்திய சுமந்திரன் மக்களால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், தற்போது மோசடி முறையில் வெற்றிபெற்றார் என யாழ்ப்பாணம் தேர்தல் வாக்கெண்ணும் நிலைய முடிவுகள் தெரிவித்துள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டதன் அடிப்படையில், ஏற்கனவே சிறிதரனுக்கு அடுத்ததாக, இரண்டாவதாக வெற்றிபெற்றவர் என அறிவிக்கப்பட்ட திருமதி சசிகலா ரவிராஜ் நீக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் மீண்டும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதால் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்து தோற்கடித்து சுமந்திரன் ஐந்தாவது நிலைக்கு […]
முன்னணியின் தேசியப்பட்டியல் கிழக்கிற்கு?
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பட்டியல் மூலமான நியமன எம்.பி கிழக்கு மாகாணத்துக்கு அதுவும் குறிப்பாக அம்பாறை அல்லது திருகோணமலைக்கு வழங்கப்பட்டு வடக்கு கிழக்கு குரல்கள் உறுதிசெயப்படுவது காலத்தின் தேவையென குரல்கள் எழுந்துள்ளன. இதன் மூலம் கட்சியின் யாழ்ப்பாண மைய அரசியல் நீக்கத்துக்கான தூரநோக்கான செயற்பாடாக அமையும் என்ற கோரிக்கையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை சசிகலாவுக்கு வழங்கித் தமிழரசுக் கட்சிக்குப் பாடம் […]










