கடத்தல் பாரதியை விடுதலை செய்! ஆர்ப்பாட்டம்

அண்மையில் கஞ்சா கடத்திய போது கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் இனியபாரதியை ஆள் கடத்தல் வழக்கில் விளக்கமறியளலில் வைக்க இன்று (21) அம்பாறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அம்பாறை பிரதான வீதி அருகில் இன்று சிலர் இனியபாரதியை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, “பிராந்திய அபிவிருத்தி வேண்டுமாயின் பாரதியை விடுதலை செய்” போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக் காரர்கள் ஏந்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் வெளி மாவட்டத்தில் […]

இனப்பிரச்சினைக்கு தீர்வை கோட்டாவிடம் இந்தியா வலியுறுத்தும் – விக்னேஸ்வரன்

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்தியா வலியுறுத்தும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தமை குறித்து வாரம் ஒரு கேள்வி பதிலில் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்ற மறுநாளே இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு […]

பிரதமராக பதவியேற்றார் மகிந்த

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் மூத்த சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச இலங்கையின் 23வது பிரதமராக சற்றுமுன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஒக்டோர் 26 அரசியல் சதியின் போது மஹிந்த ராஜபக்ச போலிப் பிரதமராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு!

தமது இனிய உயிர் அர்ப்பணிப்பால் தனியரசிற்கு வித்திட்டு ,உரமிட்ட மாவீரர்களை நினைவு கூறும் புனித மாவீரர் வார நிகழ்வு Aarhus பல்கலைக்கழக மாணவர்களால் நான்காவது தடவையாக 20.11.19 அன்று மிகவும் உணர்வு பூர்வமாக நடாத்தப்பட்டது . முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழத்தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடர் ஏற்றல், அகவணக்கம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டு அதன் பின்பு மாணவர்களால் மலர்வணக்கம் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது. மாவீரர் வார நிகழ்வில் எழுச்சி உரை,எழுச்சி நடனம்,கவிதை, பாட்டுகள் என்பன […]

கோத்தபாய போர்க்காலச் சிந்தனைகளிலேயே தற்போதும் இருக்கின்றார்!!

ஐனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தபாய ராஐபக்சவின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் என்பன போர் வெற்றிகளில் அல்லது போர்க்காலச் சிந்தனைகளிலேயே தற்போதும் இருக்கின்றார் போன்றதான நிலைப்பாட்டையே எடுத்துக் காட்டுவதாகக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஐனநாயக அரசியலுக்கு வந்தள்ளதால் போர்காசல் சிந்தனைகளில் இருந்து கோத்தபாய மாற வேண்டுமென்றும் கேட்டக் கொண்டார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழி தோண்டிப் புதைக்க நினைத்தால் அது அவருக்கு பாரதூரமாக அமையுமென்று எச்சரிக்கை விடுத்துள்ள சிறிதரன் தமிழ் மக்கள் […]

மஹிந்த பதவியேற்புடன் நாடாளுமன்றம் கலைகிறது?

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இன்று (20) பதவி விலகியுள்ளார். இந்நிலையில் நாளை (21) முன்னாள் ஜனாதிபதியும், ஒக்டோபர் 26 அரசியல் சதியின் போது போலிப் பிரதமராகவும் இருந்த மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்கிறார். இதேவேளை மஹிந்த ராஜபக்ச பதவியேற்று ஒரு வாரத்தில் நாடாளுமன்றம் கூடும் போது நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளது. இதன்போது ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் குறித்த […]

விடுதலைப் புலிகளால் சோனியா காந்தி உயிருக்கு ஆபத்தா? திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக லோக்சபாவில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு கூறியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைப்புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ எனப் திமுகவின் லோக்சபா உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரசு கட்சியின் இடைக்காலத் தலைவர் அம்மையார் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படையின் உயரியப் பாதுகாப்பு ரத்துச் […]

பிரதமராகும் மகிந்த!

மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக நாளை பிற்பகல் 1.00 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார். அத்துடன் பிரதமராக பதவியேற்றதும் மாலை 3.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளையும் உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அமைச்சர்களின் நியமனமும் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றுமொரு இனவாத அமைப்பும் ஆட்டத்தை நிறுத்த தயாரானது

நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது என்று அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசர்களுக்கு பின்னர் நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ள காரணத்தினால் இனிமேல் தேசத்தைப் பாதுகாக்க தேசிய அமைப்புகள் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கூடிய விரைவில் புதிய நாடாளுமன்றத்தை அமைத்து நாட்டை அபிவிருத்த செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் குற்றவாளிகளுக்கு […]

மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியேயா வலியுறுத்தியுள்ளார். வொசிங்டனில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர், “தமது ஜனநாயக தேர்தலை எதிர்கொண்ட சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருக்கிறது. பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் வன்முறை மீண்டும் நிகழாமல் இருப்பதை […]

மாவீரர் தினத்தில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்!

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர் தின அனுஸ்டிப்பு ஆரம்பமாகும். மாலை 6.05 கீதங்கள் இசைக்கப்பட்டு நாம் அஞ்சலி செலுத்துவோம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், மாவீரர் […]

தமிழர்களை தாக்கி வெற்றி கொண்டாட்டம்

கண்டி – ரங்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துனிஸ்கல தோட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக் கொண்டாடத்தி்ல் ஈடுபட்ட குழுவினர், சில தமிழ் மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த இளைஞர் ஒருவர் மடுல்கலை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.