சற்று முன்னர் கைது செய்யப்பட்ட மற்றுமோர் இயக்கத்தின் தலைவர்!

மஹசொன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் தெல்தெனிய பகுதியில் வைத்து இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இவர் கடந்த வருடம் கண்டியில் நடைபெற்ற கலவரத்திற்கும் தலைமை தாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு – இந்தியா அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீதித்துள்ளது இந்தியா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், தேசத்துக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றில் ஈடுபடுவதால் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில்:- ”தமிழ் ஈழத்துக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் நோக்கம் இந்தியாவின் இறையாண்மைக்கும், எல்லைப்புற ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கிறது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற பிரிவினை வாதங்களையும், சட்டவிரோதச் […]

சிங்களவர்,முஸ்லீம்கள் இடையே தொடரும் முறுகல் வீடுகள் எரிப்பு!

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் உருவாக்கி இப்பொழுது நாடுமுழுவதும் வன்முறைகள் மோதல்கள் பரவிவருகிறது , நீர்கொழும்பு ,சிலாபம் ,குளியாபிட்டிய என்று தொடக்கி இன்று ஹெட்டிபொல என்ற இடத்தில தொடர்கிறது. பதற்றம் நிலவும் இடங்களில் ஊரடங்கு அமுல்படுத்தியும் , சமூகவலைத்தளங்களை இடைநிறுத்தியும் அரசாங்கம் வன்முறைகளை கட்டுப்படுத்த முனைந்து அங்கங்கே நீடிக்கிறது. தற்போது ஹெட்டிபொல , அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகள் தீவைக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் வயல்வெளியில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஸ்ரீ […]

கொழும்பில் பெருமளவில் சிறிலங்கா படையினர் குவிப்பு – கவசவாகனங்களில் ரோந்து

சிறிலங்கா முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு நகரில் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்குளி உள்ளிட்ட கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் துருப்புக்காவி கவசவாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகளுடன் ரோந்துக் காவலில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தின் சிறப்புப் படையின் உந்துருளிப் படையணியும் தீவிரமான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. வழக்கத்துக்கு மாறாக அதிகளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை தொடக்கம், வாகனங்கள் அனைத்தும் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டு வருகின்றன. இதனால் கொழும்பு […]

ஹிஸ்புல்லா மகனுடன் கோத்தாவுக்கு நெருங்கிய தொடர்பு?

இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்குத் தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் கோத்தாபய ராஜபக்சவுக்கும் நெருக்கமான உறவுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் வெளிநாட்டு உதவிகளுடன் கட்டப்பட்டுள்ள ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பாக பலத்த சர்ச்சைகளும், சந்தேகங்களும் தோன்றியுள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் 500 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை ஹிஸ்புல்லாவின் மகன் பெற்றுள்ளார். எவ்வாறு அவருக்கு 500 மில்லியன் ரூபா பங்குகள் கிடைத்தன என்று விசாரணை செய்யப்பட வேண்டும் என்று […]

கொழும்பில் இரு இடங்களில் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி, ஒருவர் காயம்

கொழும்பு – வத்தளை, ஹுணுப்பிட்டிய பகுதியில் நேற்றிரவு நிறுத்தாமல் வேகமாகச் சென்ற வாகனம் ஒன்றின் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். வேகமாகச் சென்ற கார் ஒன்றை நிறுத்துமாறு சிறிலங்கா கடற்படையினர் சைகை செய்தனர். எனினும், காரை நிறுத்தாமல் தப்பிச் செல்ல சாரதி முற்பட்டார். இதையடுத்து, கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காரைச் செலுத்திய சாரதி படுகாயமம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணமானார். உயிரிழந்தவர் 34 வயதுடைய நபர் […]

புலனாய்வு தகவல் பரிமாற்றத்தினால் தீவிரவாதத்தை அழிக்கலாம் – மகிந்தவிடம் அமெரிக்க தூதுவர்

தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து, நட்பு நாடுகளுக்கிடையில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில் நேற்று முன்தினம் அமெரிக்க தூதுவர் சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். 2001 செப்ரெம்பர் 11 தாக்குதலை அடுத்து, தமது நாடு தீவிரவாதிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து […]

அம்பாந்தோட்டையில் 7 தற்கொலைக் குண்டுதாரிகள் கைது

காத்தான்குடியைச் சேர்ந்த, தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான – நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஏழு தற்கொலைக் குண்டுதாரிகள் அம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் நெருங்கிய உதவியாளர்களாவர். சஹ்ரானின் சகோதரர்களில் ஒருவரே, இவர்களை அம்பாந்தோட்டைக்கு அழைத்து வந்துள்ளார். இவர்களுக்கு மிகவும் புத்திசாலித்தனமான முறையில் அம்பாந்தோட்டையில் ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி நீண்ட நாட்களாக அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, […]

கோத்தாவை போல உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு முன்னாள் அமெரிக்க தூதுவர் ஆலோசனை

தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு, உயர்மட்ட தொழிற்திறன் வாய்ந்த குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த கருத்தரங்கில், “சீனா மற்றும் தெற்காசியாவை நோக்கிய அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் இலங்கைக்கான அதன் அர்த்தம்“ என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “தீவிரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்கு, முன்னர் கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்த போது, […]

சோதனையிட வருவது தெரிந்தும் ஏன் படங்களை அகற்றவில்ல – கட்டளைத் தளபதி

யாழ்.பல்கலைக்கழகம் சோதனையிடப்படும் விடயம் உடனடியாக நடந்த ஒன்றல்ல. அது முன்னதாகவே அறிவிக்கப்பட்டு நடந்தது. ஆகவே அவா்கள் அங்குள்ள படங்களை அகற்றியிருக்க முடியாதா? என கேள்வி எழுப்பியுள்ள யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி தா்ஷன ஹெட்டியாராச்சி, பல்கலைக்கழக வளாகத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் இடம்பெறாது என உறுதிப்படுத்துங்கள்” என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றாா். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையால் தீர்மானிக்கப்படதற்கு அமைய பீடாதிபதிகள் மற்றும் பதிவாளர் யாழ்ப்பாணம் மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் […]

முன்னாள் கூட்டமைப்பு எம்.பி பியசேனவுக்கு சிறைத்தண்டனை

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடிஅப்புஹாமி பியசேனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று நான்கரை ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரதமர் செயலக வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவருக்கு .இந்த தண்டனை விதிக்கப்பட்டது. பிரதமர் செயலக வாகனத்தை திரும்பக் கையளிக்காமல் முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், 2016 ஜூலை 29ஆம் நாள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த […]

ரிஷாட் பதியுதீன் வீடு பாதுகாப்பு தரப்பினரால் முற்றுகை!

மன்னார் – தாராபுரம் பகுதியில் பாதுகாப்பு படையினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீடும் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த வீட்டில் இருந்து எந்தவித சந்தேகத்திற்குரிய பொருட்களையும் கண்டுபிடிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அதன்படி தற்போதுவரை பல வெடிபொருட்கள், ஆயுதங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தில் பலரும் […]