ஓடு ஓடு:போட்டோ போட அறிக்கை விட ஓடு!

தமிழ் மக்கள் பிரச்சினைகள் பற்றி ஊடகங்களில் வெளியானதும் அதனை தேடுவதும் பின்னர் அறிக்கைவிட்டு அரசியல் செய்வதும் தமிழ் தேசியப்பரப்பில் சலித்துப்போன காட்சிகளாக மாறிவருகின்றது. அது நிலப்பிடிப்பாயினும் சரி கடல் பிடிப்பாயினும் சரி கண்மூடியிருக்கும் தமிழ் தலைவர்கள் ஊடகங்களில் பேசுபொருளானால் ஓடோடி வருவதும் அவர்கள் பின்னால் கமராவுடன் தொலைக்காட்சிகள் திரிவதும் அண்மைய காட்சிகளே. பூநகரி – கௌதாரிமுனை பகுதியில். சீன நிறுவனமொன்றால் முன்னெடுக்கப்பட்டு வரும் அட்டை வளர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காகவென நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், […]

முள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு!!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான நடைபயணத்தின் மூன்றாவது நாளான இன்று தற்போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியை குறித்த பேரணி அடைந்துள்ளது.இதன் ஒரு கட்டமாக கடந்த மாதம் இடிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக தூபியை கட்டுவதற்கு முள்ளிவாய்க்கால் நினைவு இடத்தின் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிக்கப்பட்டது.

இப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல!!

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் நாங்கள் தெரியப்படுத்துவது, இப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்தோ அல்லது தனிநபர்சார்ந்தோ அல்லது நிறுவனம் சார்ந்தோ நடைபெறுகின்ற போராட்டம் இல்லை. இப்போரட்டமானது வடக்கு – கிழக்கு சார்ந்த சிவில் அமைப்புக்களால் நடத்தப்படுகின்றன என்பதை அறியத்தருகின்றோம் என தவத்திரு வேலன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பொலிகண்டிக்கும் தடையாம்?

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி வவுனியாவிலிருந்து இன்று மன்னார் நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. நாளை யாழ்ப்பாணத்தை அது வந்தடையவுள்ள நிலையில் நிகழ்வின் இறுதி மையமான பொலிகண்டியை சென்றடைய தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இன்று முதல் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை […]

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்

தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தமிழீழ மாவீரர் தினமான இன்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார். தமது யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் இன்று மாலை உரிய நேரத்திற்கு மாவீரர்களுக்கு நினைவுச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார். இதன்போது அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் தடைகளை உடைத்தெறிந்து மாவீரர்களுக்கு நினைவேந்தல்

வவுனியாவில் சிங்களப் படையினரதும் பொலிஸாரதும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. சரியாக 6.05 இற்கு ஆலயங்களில் மணி ஒலி எழுப்பப்பட்டு வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் மாவீரர் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. இதன்போது சில இடங்களில் துயிலும் இல்லப் பாடலும் ஒலிக்க விடப்பட்டது. படையினரும் பொலிஸாரும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் தடைகளையும் மீறி மக்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர். […]

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்!

இறையாண்மை உள்ள ஜனனாயக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் ஒளிவீச்சாக நினைவுகூரப்பட்ட மாவீரர்கள். மாவீரர்களை நினைவுகூரும் முகமாகப் பிரித்தானிய நாடாளுமன்றக் கொத்தளங்களில் கார்த்திகைப் பூ ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது. எந்தவொரு அமைப்பினதும் பின்புலம் இன்றி தன்னெழுச்சியுடன் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலர் எடுத்த முயற்சியின் விளைவாகவே இச் சாதனை நிகழ்ந்தேறியுள்ளது. அத்தோடு ‘இனவழிப்புப் புரிந்த சிறீலங்கா அரசை எதிர்கொண்டு விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை நினைவுகூருகின்றோம்’ என்ற வாசகமும் கார்த்திகைப் பூவின் கீழ் பிரித்தானிய நாடாளுமன்றக் கொத்தளங்களில் ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது.

தலைவன்டா! தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்

தமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூகவலைத்தளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இதுவரை 60,000ற்கும் மேற்பட்ட பதிவுகள் தேசியத்தலைவரின் பிறந்தநாளுக்காக பதிவிடப்பட்டுள்ளன. இது சம்பந்தப்பட்ட டுவிட்டர் ஹாஸ்டாக் ஆன #HBDமேதகுPRABHAKARAN தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடக்த்தகது.

நாளை மாலை 6.05 க்கு அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றுங்கள்

அரசு எத்தனை தடைக் கட்டளைகளைப் பெற்றுக் கொண்டாலும் எமது மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்கமுடியாது என அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், கார்த்திகை 27ஆம் திகதி மக்கள் இல்லங்களில் மாலை 6.05 மணிக்கு நினைவுகூரலை மேற்கொள்ளுமாறு அந்தக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினரும் நேற்று மாலை ஒன்று கூடியிருந்தனர். இதன்போதே ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,2020ஆம் ஆண்டு மாவீரர் […]

பிரபாகரன்புரட்சியின் குறியீடு – கவிபாஸ்கர்

பிரபாகரன்! இது…வெறும் பெயர்ச்சொல் இல்லை!புரட்சியின் குறியீடு! பிரபாகரன்! இது…வெறும் வார்த்தை இல்லை!ஒரு இனத்தின் உயிர்ப்பு! பிரபாகரன்!இரவா புலி!மறவா! மொழி! அவன் சுற்றும் பூமிஅவனே சுழற்சி!அவனே எழுச்சிஅவனே அரண்அவனே அறம்! நெருப்புக்கர்ப்பம் தரித்துப் பிறந்தவன்! பிரபாகரன்..கைகால் முளைத்தக் கதிரவன்! துவக்குகளின் துவக்கம் – பிரபாகரன்துவண்டுபோகாத இயக்கம்! சோழப்பரம்பரை கரிகாலன் எம்ஆண்ட இனத்தின் எல்லாளன்! கரும்புலி கண்டெடுத்த கன்னிவெடிதமிழன் முகவரி மீட்டெடுத்த வரிப்புலி தாயின் கர்ப்பபை இருட்டறை – இவன்தாயின் இருப்போ நெருப்பறை! புறநானூற்றை படித்த இனம்- இன்றுபிரபாகரனை படிக்கிறது! […]

தியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்!

இனப்படுகொலையாளிகளின் ஆட்சியில் சிங்களக் காவல்துறையின் கெடுபிடிகளோடு நீதிமன்றத் தடையுடன் தியாக தீபம் லெப்.கேணல்திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளின் முதலாம் நாள் இன்று ஆரம்பமாகின்றது. யாழ்ப்பாணம் ஊரெழுவில் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தார் திலீபன். தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு இலங்கைத் தமிழர்கள் ஆயுத போராட்டத்தைக் கையில் எடுத்தனர். ஆரம்பத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து […]

திலீபனை நினைவேந்திய சிவாஜிலிங்கம் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் மீறி கோண்டாவில் பகுதியில் வைத்து தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய போது கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.