வானிருக்கும் மட்டும் நீ வாழவேண்டும் – உன்னை நாம் வாழ்த்த வேண்டும் வானத்தின் எல்லை போதவில்லை – உன் வீரத்தின் எல்லை சொல்ல பூக்களின் மென்மை போதவில்லை – மன ஈரத்தின் தன்மை சொல்ல இரும்பெல்லாம் நொருங்கும் – உன் உறுதிகண்டு கருங்கல்லே உருகும் – உன் கருணை கண்டு புயலுக்கு வேகம் பழக்கினாய் பூமிக்கு பொறுமை புகட்டினாய் தாய்மைக்குப் பாசம் வழங்கினாய் நீருக்குள் நெருப்பெரிக்கும் நெறியைக் கொடுத்தாய் பூவுக்குள் பூகம்பத்திறனைப்; புகுத்தினாய் சாவுக்குள் சாதனைச் செயலை […]
Author: இலக்கியன்
ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கியமை தவறானது – ஜனாதிபதி
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு உடன்படிக்கையில் கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்டமை தவறானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த ஒப்பந்தம் தொடர்பாக சீன நிறுவனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கருத்து தெரிவித்த அவர், சீனாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஆனால் இராணுவ மற்றும் புவிசார் அரசியல் போட்டிகளில் ஈடுபட போவதில்லை என்றும் கூறினார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் […]
இன அழிப்பை மறந்துவிடவேண்டுமாம் – கோட்டபாய
பேரினவாதிகளின் (பெரும்பான்மை சமூகத்தின்) மனதில் சந்தேகத்தை உருவாக்கும் சில விஷயங்களை சிறுபான்மையினர் செய்தால் மட்டுமே பெரும்பான்மை சமூகம் எதிர்வினையாற்றும். அதை சிறுபான்மையினர் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் பிறந்தால் எல்லோரும் இலங்கை குடிமக்களே . அவர்களுக்கு எல்லோருக்கும் சம உரிமை உண்டு. ஆனால் சிறுபான்மையினர் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். என தெரிவித்துள்ளார் தமிழின அழிப்பு சூத்திரதாரியான கோட்டாபய ராஜபக்ச. இந்தியாவின் பாரத் சக்தி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது […]
கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தலல் நிகழ்வு அறிவித்தல்
யாழ் கோப்பாய் துயிலுமில்ல வணக்க நிகழ்வுகள் துயிலுமில்லம் அமைந்திருந்த இடத்திற்கு அண்மையில் இராச வீதியில் விசேடமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இடத்தில் 27-11-2019 புதன்கிழமை மாலை சிறப்புற நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளன. வடமராட்சி எள்ளன்குளம் வணக்க நிகழ்வுகள் வடமராட்சி பிரதேச வணக்க நிகழ்வுகள் 27-11-2219 புதன்கிழமை பருத்தித்துறை முனை பகுதியில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (முனை வெளிச்ச வீட்டிலிருந்து 500 மீற்றர் தொலைவில்) மேற்படி வணக்க நிகழ்வுகளுக்கு தாயக உறவுகள் அனைவரையும் அனைவரையும் அன்புடன் அழைக்ககின்றோம். மாலை 6.05 […]
மாவீரர் நாள் இவ்வாண்டு முப்பது ஆண்டுகளைத் தொட்டு நிற்கின்றது.
நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம் அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். 25.11.2019 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 அன்பார்ந்த தமிழீழ மக்களே! நாம் எமது தாயகமாம் தமிழீழத்தின் விடுதலைக்காகவும், எமது எதிர்காலச் சந்ததியின் சுதந்திர வாழ்வுக்காகவும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த […]
நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு
மாவீரர் தியாகம் எவ்வளவு போற்றுதலுக்குரியதோ அது போல மாவீரர் உறவுகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. இவர்களை மதிப்பளிக்க வேண்டியது நம் முதன்மையான கடமையில் ஒன்றாகும். அவ் வகையில் நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் 24-11-2019 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 7.30 மணியளவில் 32 A range view road, Mount Albert, Auckland 1025 எனும் இடத்தில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. முதல் நிகழ்வாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஈகச்சுடரினை […]
தமிழர்கள் அனைவரிடமும் அதாவுல்லா மன்னிப்பு கோர வேண்டும்
அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் நீரை வீசியிருந்தார். தோட்டத் தொழிலாளர் தொடர்பாக முறை தவறிய வார்த்தைகளை பாவித்தமையினாலேயே அப்படி செய்ததாக மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று (25) மனோ கணேசனுக்கு […]
ஆரையம்பதியில் மூன்று இளைஞர்கள் பலி! நடந்தது என்ன?
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவு, ஆரையம்பதி கிழக்கு திருநீற்றுக்கேணி குளத்தில் இன்று (25) காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து காணாமல் போன மூன்று இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். வெற்றுக் கலன்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட படகு ஒன்றில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்துள்ளது. இந்நிலையிலேயே இன்று மாலை இவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தோட்டக்காட்டான் என்றார் அத்தாவுல்ல, அவருக்கு தண்ணீரால் ஊற்றினார் மனோ கணேசன்
மலையகத் தமிழர்களைத் தோட்டக்காட்டான் என விழித்துக் கூறிய ஏ.எல்.எம். அத்தாவுல்ல மீது, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குடிதண்ணீரை ஊற்றியதுடன், அவரைக் கடுமையாகத் திட்டித்தீர்த்தார். சக்தி ரி.வியின் இன்று (24) இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. நேரடி ஒளிபரப்பாக இடம்பெற்ற இந்தக் காட்சியை மக்கள் நேரில் பார்வையிட்டனர். சக்தி ரி.வியில் வாராந்தம் நடைபெறும் மின்னல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு அரசியல் விவாதம் நடத்தப்படும். இதன்போது, வாசகர்கள் நேரடியாகவே அந்த அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்பினால் […]
தமிழ் பெயர் பலகைகளை அழித்தவர்களை கைது செய்ய சொன்ன இனப்படுகொலையாளி.!
தென்னிலங்கையில் தமிழ் வீதிப் பெயர் பலகைகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக விசாரணை நடத்தி கைது செய்யுமாறு இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்ச நேற்று (24) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பெயர் பலகைகளை மீள பொருத்துமாறு தனது அலுவலகத்திற்கும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஶ்ரீகாந்தா முடிவு: அதிகரிக்கும் தமிழ்க் கட்சிகளின் எண்ணிக்கை
ரெலோவின் முன்னாள் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தலைமையில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் பொறுப்பிலிருந்து சிறிகாந்தாவை இடைநிறுத்துவதென நேற்று முன்தினம் ரெலோ தலைமைக்குழு முடிவெடுத்தது. அது குறித்த கடிதம் நேற்று அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிய சிறிகாந்தா, புதிய கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார். இதில் ரெலோவின் யாழ் மாவட்ட பிரமுகர்கள் பலர் இணைந்து கொள்வார்கள் என தெரிகிறது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் […]
அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டேன் – கோத்தா
அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு தான் ஒருபோதும் அடிபணியமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்று பௌத்த பிக்குகள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். அந்த ஆணையின் படியே நான் செயற்படுவேன். ஒரு நோக்கத்துக்காகவே என்னை மக்கள் தெரிவு செய்தனர். அவர்கள் விரும்பியதை நிறைவேற்றி வைக்க வேண்டும். சில அரச சார்பற்ற நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கமை, குற்ற வி்சாரணைப் பிரிவின் அதிகாரிகள் சிலர் விசாரணைகளை நடத்தினர்” […]











