வல்வெடடித்துறை தீருவில் தூபி பகுதியில் உள்ளுர் இளைஞர்கள் மேற்கொண்ட சிரமதானப்பணிகள் இலங்கை காவல்துறையால் இன்று காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் இலங்கை காவல்துறையினர் நிலை கொள்ள வைக்கப்பட்டுள்ளனர். குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட 12 மாவீரர்களதும் அதே போன்று கிட்டு உள்ளிட்ட போராளிகளதும் நினைவு தூபிகள் தீருவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.எனினும் அவை பின்னர் இலங்கைப்படைகளால் அழிக்கப்பட்டிருந்தது. எனினும் ஒவ்வொரு மாவீரர் தினத்தன்றும் ஒன்று கூடும் மக்கள் அங்கு நினைவேந்தலை முன்னெடுத்துவருவது வழமையாகும். இந்நிலையில் இன்று […]
Author: இலக்கியன்
கோட்டாபய – மஹிந்த தலைமையிலான குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது அதற்கு முன்னரோ கோட்டாபய – மஹிந்த தலைமையிலான குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு ஏற்பட்ட தோல்விக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்போம்.” இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றியடைந்து ஜனாதிபதியாகப் பதியேற்றவுடன் அமைச்சரவையைக் கலைத்து பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்கிரமசிங்க, நேற்று பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் […]
யாழில் சிக்கியது சுறா
யாழ்ப்பாணத்தில் மீனவர் ஒருவருக்கு பாரிய சுறா மீனொன்று சிக்கியுள்ளது. குறித்த சுறா மீன் 2000 கிலோ கிராம் நிறையுடையதென குறித்த மீனவர் தெரிவித்துள்ளார். நயினாதீவை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையிலேயே இன்று (22) இந்த சுறா சிக்கியது. இதனை தண்ணீர் சுறா என மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஜதேகவிற்கு புதிய தலைமை தேவை:ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய தலைமைத்துவம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார். தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது பிளவுநிலை ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக கட்சிக்குள் ஓர் அணியும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியவருமான சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக இன்னுமொரு அணியும் பிரிந்திருப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், […]
கடத்தல் பாரதியை விடுதலை செய்! ஆர்ப்பாட்டம்
அண்மையில் கஞ்சா கடத்திய போது கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் இனியபாரதியை ஆள் கடத்தல் வழக்கில் விளக்கமறியளலில் வைக்க இன்று (21) அம்பாறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அம்பாறை பிரதான வீதி அருகில் இன்று சிலர் இனியபாரதியை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, “பிராந்திய அபிவிருத்தி வேண்டுமாயின் பாரதியை விடுதலை செய்” போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக் காரர்கள் ஏந்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் வெளி மாவட்டத்தில் […]
இனப்பிரச்சினைக்கு தீர்வை கோட்டாவிடம் இந்தியா வலியுறுத்தும் – விக்னேஸ்வரன்
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்தியா வலியுறுத்தும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தமை குறித்து வாரம் ஒரு கேள்வி பதிலில் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்ற மறுநாளே இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு […]
பிரதமராக பதவியேற்றார் மகிந்த
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் மூத்த சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச இலங்கையின் 23வது பிரதமராக சற்றுமுன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஒக்டோர் 26 அரசியல் சதியின் போது மஹிந்த ராஜபக்ச போலிப் பிரதமராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டென்மார்கில் பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் வார நிகழ்வு!
தமது இனிய உயிர் அர்ப்பணிப்பால் தனியரசிற்கு வித்திட்டு ,உரமிட்ட மாவீரர்களை நினைவு கூறும் புனித மாவீரர் வார நிகழ்வு Aarhus பல்கலைக்கழக மாணவர்களால் நான்காவது தடவையாக 20.11.19 அன்று மிகவும் உணர்வு பூர்வமாக நடாத்தப்பட்டது . முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழத்தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடர் ஏற்றல், அகவணக்கம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டு அதன் பின்பு மாணவர்களால் மலர்வணக்கம் உணர்வுபூர்வமாக செலுத்தப்பட்டது. மாவீரர் வார நிகழ்வில் எழுச்சி உரை,எழுச்சி நடனம்,கவிதை, பாட்டுகள் என்பன […]
கோத்தபாய போர்க்காலச் சிந்தனைகளிலேயே தற்போதும் இருக்கின்றார்!!
ஐனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தபாய ராஐபக்சவின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் என்பன போர் வெற்றிகளில் அல்லது போர்க்காலச் சிந்தனைகளிலேயே தற்போதும் இருக்கின்றார் போன்றதான நிலைப்பாட்டையே எடுத்துக் காட்டுவதாகக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஐனநாயக அரசியலுக்கு வந்தள்ளதால் போர்காசல் சிந்தனைகளில் இருந்து கோத்தபாய மாற வேண்டுமென்றும் கேட்டக் கொண்டார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழி தோண்டிப் புதைக்க நினைத்தால் அது அவருக்கு பாரதூரமாக அமையுமென்று எச்சரிக்கை விடுத்துள்ள சிறிதரன் தமிழ் மக்கள் […]
மஹிந்த பதவியேற்புடன் நாடாளுமன்றம் கலைகிறது?
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இன்று (20) பதவி விலகியுள்ளார். இந்நிலையில் நாளை (21) முன்னாள் ஜனாதிபதியும், ஒக்டோபர் 26 அரசியல் சதியின் போது போலிப் பிரதமராகவும் இருந்த மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்கிறார். இதேவேளை மஹிந்த ராஜபக்ச பதவியேற்று ஒரு வாரத்தில் நாடாளுமன்றம் கூடும் போது நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளது. இதன்போது ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் குறித்த […]
விடுதலைப் புலிகளால் சோனியா காந்தி உயிருக்கு ஆபத்தா? திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்
தமிழீழ விடுதலைப் புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக லோக்சபாவில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு கூறியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைப்புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ எனப் திமுகவின் லோக்சபா உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரசு கட்சியின் இடைக்காலத் தலைவர் அம்மையார் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படையின் உயரியப் பாதுகாப்பு ரத்துச் […]
பிரதமராகும் மகிந்த!
மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக நாளை பிற்பகல் 1.00 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார். அத்துடன் பிரதமராக பதவியேற்றதும் மாலை 3.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளையும் உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அமைச்சர்களின் நியமனமும் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.












