மாவீரர்களை நினைவுகூர அச்சமின்றி அணிதிரளுங்கள்

மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (23) தெரிவிக்கையில், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் மாவீரர் நாள் நினைவுகூரல் தொடர்பாக மக்கள் மத்தியில் ஒரு பதற்றமான நிலை உருவாகியிருக்கின்றது. ஆனால் அவ்வாறான ஒரு பதற்றம் தேவையற்றதாகும். – என்றார்.

தமிழ் மொழியை அழிக்கும் இனவாதம் தொடர்கிறது

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அண்மையில் சுதந்த மாவத்தையின் தமிழ் பெயர் பலகை இனம் தெரியாத நபர்களினால் அழிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாணந்துறை, கெரவலபிட்டிய பகுதிகளின் தமிழ் மொழி பெயர் பலகைகளும் அதே போல் உடைந்தெறிந்து அழிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீகந்தா உள்ளிட்டோர் நீக்கம் – கட்சியின் அதிரடி ஆரம்பம்!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா, யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வெஸ்டர் விமல்ராஜ் மற்றும் துணை அமைப்பாளர் ஜெ.ஜனார்தன் ஆகியோர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று (23) திருகோணமலையில் அவர்களது கட்சி அலுவலகத்தில் உப தலைவர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், முக்கியஸ்தர் வினோராதலிங்கம் மற்றும் ஜனா கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாலை […]

மட்டக்களப்பு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி

மட்டக்களப்பில், படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேசம் மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சிரமதானப் பணிகள் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம் உட்பட பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். வழமை போன்று இவ்வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெறுவதற்கான முன்னேற்பாடுகள் பல மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இடம்பெற்று வருகின்றன. […]

ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளியேற்ற கோரிக்கை

ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளிவிவகார அமைச்சிலிருந்து வெளியேற்றி அமைச்சை தூய்மைப்படுத்துமாறு உலக இலங்கை மன்றம், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெனீவா பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவ்வமைப்பின் இஸ்ரேல் நாட்டுக்கான பிரிவின் செயலாளர் ஜனெத் விமல, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலத்தில் இந்த அதிகாரிகள் செயற்பட்ட விதத்தை நாம் அவதானித்தோம். இவர்கள் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களுக்கு வேண்டியவாரே செயற்பட்டனர். நாம் ஜெனீவா சென்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு […]

யாழ்ப்பாணத்தில் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் இன்று (23) சனிக்கிழமை காலை எரித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்தக் கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையாகவுள்ள வெற்றுக் காணியில் குறித்த கஞ்சா இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு எரித்து அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த ஒரு வருடத்துக்குள் இடம்பெற்று முடிந்த கஞ்சா […]

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (23) காலை கிளிநொச்சியில் நடைபெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்துகொண்டிருந்தார். இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பொது உருவப் படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் விடுதலைப் போரில் உயிரிழந்த வீரர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

வைகோவின் முக்கிய கோரிக்கையை ஏற்றார் சபாநாயகர்!

இந்திய விமானங்களின் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே சொல்ல வேண்டும் என, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், இன்றைய காலகட்டத்தில், விமானங்களில் பறப்பது சொகுசுப் பயணம் அல்ல. இப்போது நேர சேமிப்பைக் கருதி நடுத்தர மக்கள், மாத ஊதியம் பெறுவோர், விவசாயிகள் எனப் பலர் விமானப் பயணங்களை மேற்கொள்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் வேலைகளுக்காக வளைகுடா […]

தடுத்து நிறுத்தப்பட்டது மாவீரர் தின சிரமதானம்:தீருவிலில் பதற்றம்

வல்வெடடித்துறை தீருவில் தூபி பகுதியில் உள்ளுர் இளைஞர்கள் மேற்கொண்ட சிரமதானப்பணிகள் இலங்கை காவல்துறையால் இன்று காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் இலங்கை காவல்துறையினர் நிலை கொள்ள வைக்கப்பட்டுள்ளனர். குமரப்பா மற்றும் புலேந்திரன் உள்ளிட்ட 12 மாவீரர்களதும் அதே போன்று கிட்டு உள்ளிட்ட போராளிகளதும் நினைவு தூபிகள் தீருவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.எனினும் அவை பின்னர் இலங்கைப்படைகளால் அழிக்கப்பட்டிருந்தது. எனினும் ஒவ்வொரு மாவீரர் தினத்தன்றும் ஒன்று கூடும் மக்கள் அங்கு நினைவேந்தலை முன்னெடுத்துவருவது வழமையாகும். இந்நிலையில் இன்று […]

கோட்டாபய – மஹிந்த தலைமையிலான குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது அதற்கு முன்னரோ கோட்டாபய – மஹிந்த தலைமையிலான குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு ஏற்பட்ட தோல்விக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்போம்.” இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றியடைந்து ஜனாதிபதியாகப் பதியேற்றவுடன் அமைச்சரவையைக் கலைத்து பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்கிரமசிங்க, நேற்று பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் […]

யாழில் சிக்கியது சுறா

யாழ்ப்பாணத்தில் மீனவர் ஒருவருக்கு பாரிய சுறா மீனொன்று சிக்கியுள்ளது. குறித்த சுறா மீன் 2000 கிலோ கிராம் நிறையுடையதென குறித்த மீனவர் தெரிவித்துள்ளார். நயினாதீவை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையிலேயே இன்று (22) இந்த சுறா சிக்கியது. இதனை தண்ணீர் சுறா என மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜதேகவிற்கு புதிய தலைமை தேவை:ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய தலைமைத்துவம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார். தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது பிளவுநிலை ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக கட்சிக்குள் ஓர் அணியும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியவருமான சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக இன்னுமொரு அணியும் பிரிந்திருப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், […]