பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் -பிரிட்டனும் கவலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறுவது குறித்து இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் அன்றூ பட்ரிக் கரிசனை வெளியிட்டுள்ளார் டுவிட்டரில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளேன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்துவதாகவும் மனித உரிமைகளை மதிக்கும் புதிய சட்டத்தினை கொண்டுவருவதாகவும் இலங்கை அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளில் உறுதியாகயிருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

புலிகளின் சின்னம் பொறித்த ரி. சேர்ட் அணிந்த யாழ். இளைஞன் – பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்

யாழில். விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் புலிகளின் தலைவரின் படம் பொறித்த ரி – சேர்ட் அணிந்த இளைஞனை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் கொடிகாமத்தை சேர்ந்த 27 வயது இளைஞன் புலிகளின் சின்னம் மற்றும் புலிகளின் தலைவரின் படம் பொறித்த ரி – சேர்ட் அணிந்தவாறு நிகழ்வில் கலந்து கொண்டார். அது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த இராணுவ […]

சுமந்திரனுள்ளும் புகுந்தததா விடுதலை ஆவி!

தமிழரசுக்கட்சியின் தலைவர் கதிரைக்கு போட்டியிட எம்.ஏ.சுமந்திரன் தயாராகியுள்ள நிலையில் கிளிநொச்சியில் மாவீரர் குடும்பங்களது கௌரவிப்பிற்கு தனது சொந்த நிதியிலிருந்து நிதி அள்ளி வழங்கியுள்ளார். இதனிடையே வடமராட்சியில்; மாவீரர்களின் பெற்றோர்கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றிருந்த நிலையில் குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எ சுமந்திரனும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிலங்கையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்இடம் பெற்ற நேர்காணலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் […]

பாண்டியன்குளம் பிரதேசங்களில் சட்டவிரோத காடழிப்பு-அதிகாரிகள் மௌனம்!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் சட்ட விரோத காடழிப்பு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் பிரதேச செயலக அதிகாரிகள் அசண்டையீனமாக இருப்பதாகவும் ,நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு மறைமுக அனுமதி வழங்குவதாக சந்தேகிப்பதாகவும் பிரதேச பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் குறிப்பாக குத்தகை அடிப்படையிலாக காணிகளை பெற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் குத்தகை அடிப்படையில் கேட்டு கொள்ளும் காணி அளவினை விடவும் மேலதிகமாக காணிசிரமதானம் செய்து வைத்து கொள்ளும் நபர்கள் மீது பிரதேச […]

மாங்குளம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர்!

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் மகா வித்தியாலயத்திற்கு நேற்றைய தினம் புதிய அதிபர் கடமைஏற்றுள்ளார் துணுக்காய் வலயத்தின் மையத்தில் அமைந்துள்ள 1AB தரத்தைச் சேர்ந்த மாங்குளம் மகாவித்தியாலய பாடசாலையானது இரண்டு வருடங்களுக்கு மேலாக அதிபர் இன்றி இயங்கி வந்தது குறித்த பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி  கடந்த 17 ம் திகதி  பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் இணைந்து  பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை  முன்னெடுத்திருந்தனர் இதேவேளை  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றவேளை பிரதிநிதிகளுடன் உரையாடிய வடமாகாண கல்வி […]

தளபதி ராம் விடுதலை!

விடுதலை புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் நேற்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றையதினம் 6 வருட சிறை தண்டனை நிறைவு பெற்ற நிலையில் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் அம்பாறை மாவட்ட […]

ஜனாதிபதி பதவி விலகல் தொடர்பில் வாசுதேவ நாணயக்கார வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை பதவி விலகக்கூடும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என தற்போது அனைவரும் கூறுகின்றனர் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

இந்திய தூதரகத்திற்கு மதிப்பளித்தது முன்னணி!

வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டுகின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் கூறியிருந்தார். ஆனால், கடலுக்கு செல்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் தற்போதும் இடம்பெறுகின்றது. அத்தோடு இதனை கண்டுகொள்ளாமல் பிரச்சினைக்கு தீர்வை காணாமல் இருப்பது இரு தரப்பையும் […]

சாணக்கியன், சுமந்திரனின் பசப்பு வார்த்தை! மக்கள் ஏமாறக்கூடாது -கஜேந்திரன்

சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கில் இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு விடயத்தை தொடர்ந்தும் ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது, தமிழ் தாயகத்தில் […]

யாழ்.பல்கலையில் சுடரேற்றல்:ஆரியகுளத்தில் மரநடுகை!

இலங்கை அரசு மாவீரர் தினத்தை முடக்கிவிட துடிக்க இயலுமானவரையில் நினைவேந்தலை தமிழ் சமூகம் முன்னெடுத்தே வருகின்றது. யாழ்.பல்கலையில் மாவீரர் தின விளக்கேற்றலிற்கு இலங்கை காவல்துறை தடை பெற்றுள்ள நிலையில் இன்று மாவீரர் நினைவுதூபியில் தடாலடியாக மாணவர்கள் அஞ்சலித்து சுடரேற்றியுள்ளனர். புல்கலைக்கழ சூழலை சுற்றி படையினர் காத்திருக்க மாணவர்கள் தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். இதனிடையே யாழ்.நகரிலும் மரநடுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆரியகுளத்தை சூழ அழகுபடுத்தலின் கீழ் மரங்களை மாநகரசபை உறுப்பினர்கள் நாட்டியுள்ளனர்.

யாழில் கறுப்பு ஜீலை கவனயீர்ப்பு!

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?, இன அழிப்புக்கு நீதி வேண்டும், அரசியல் கைதிகளை விடுதலை செய், வெளியேறு இராணுவமே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பினர். குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது […]

மனைவி, மச்சான்…கூண்டோடு உள்ளே!

பணிப்பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் (44) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப்பெண்ணாக இருந்த மற்றுமொரு பெண் ஒருவரே இவ்வாறு வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளார். முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைச்செய்தபோது, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பில் 20 வாக்குமூலங்கள் பதிவு […]