திருகோணமலை,வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எவ்வாறு இருப்பினும் இதுவரை எந்த ஒரு அரச அதிகாரிகளும் இது தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் திருகோணமலை – அனுராதபுரம் பிரதான வீதியினை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த உப்புவெளி பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடுவதற்கு உதவி செய்வதாக உறுதியளித்ததை அடுத்து […]
Category: செய்திகள்
புதிய தலைமையை தெரிவு செய்வதில் சிக்கல்-மாவை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை இணக்கப்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு முயற்சிகளை எடுத்துவருவதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் விண்ணப்பங்களைச் செய்துள்ளனர். ஆரம்பத்திலிருந்தே புதிய தலைமைக்கான தெரிவானது வாக்கெடுப்பின்றி நடைபெறவேண்டும். அதுவே கடந்த காலங்களில் சம்பிரதாயமாக இருந்து வருகின்றது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் மாவை சோ.சேனாதிராஜா தற்போது […]
ஒதியமலைப் படுகொலை நினைவேந்தலைக் குழப்பிய பொலிஸ்!
ஒதியமலைப் படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நேற்று கடைப்பிடிக்கப்பட்ட போது ஒட்டுசுட்டான் பொலிஸார் நிகழ்வில் புகுந்து குழப்பம் விளைவித்துள்ளனர். 1984ஆம் ஆண்டு டிசெம்பர் 2ஆம் திகதி அதிகாலைவேளையில் ஒதியமலைக்குள் புகுந்த இராணுவத்தினரும், சிங்களக் காடையர்களும் அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களை சனசமூக நிலையத்துக்கு வரவழைத்து அவர்களது ஆடைகளைக் களைந்து 27 பேரை சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்திருந்ததுடன், 5 பேர் கடத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டனர். இதன் 39 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட […]
துவாரகா விவகாரம் : விடுதலைப் புலிகளின் போராளிகள் கட்டமைப்பு அறிக்கை
புலம்பெயர் தேசங்களில் தழிழ்த்தேசியம் சார்பில் இயங்கும் அமைப்புக்களின் செயற்பாடுகளை வலுவிழக்க இலங்கை அரசு செயற்பட்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் கட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினத்தன்று விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் துவாரகாவின் உரையாடல் காணொளி வெளியிடப்பட்டது இந்த காணொளி தொடர்பில் போராளிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது தேசவிடுதலை வரலாற்றை திரிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் […]
பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் உள்ளிட்டவர்களை மட்டு சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தர். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை […]
நெடுந்தீவு மக்களுக்கு படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை!
நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய தூதுவர் வியாழக்கிழமை (30) நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றார். இதன்போதே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.இதன்போது இந்திய தூதுவரிடம் நெடுந்தீவு மக்களுக்கான குடிநீர் தேவையினை சீராக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றையும் பெற்றுத் தருமாறும் பிரதேச […]
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் -பிரிட்டனும் கவலை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறுவது குறித்து இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் அன்றூ பட்ரிக் கரிசனை வெளியிட்டுள்ளார் டுவிட்டரில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளேன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்துவதாகவும் மனித உரிமைகளை மதிக்கும் புதிய சட்டத்தினை கொண்டுவருவதாகவும் இலங்கை அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளில் உறுதியாகயிருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என அவர் பதிவிட்டுள்ளார்.
புலிகளின் சின்னம் பொறித்த ரி. சேர்ட் அணிந்த யாழ். இளைஞன் – பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்
யாழில். விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் புலிகளின் தலைவரின் படம் பொறித்த ரி – சேர்ட் அணிந்த இளைஞனை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் கொடிகாமத்தை சேர்ந்த 27 வயது இளைஞன் புலிகளின் சின்னம் மற்றும் புலிகளின் தலைவரின் படம் பொறித்த ரி – சேர்ட் அணிந்தவாறு நிகழ்வில் கலந்து கொண்டார். அது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த இராணுவ […]
சுமந்திரனுள்ளும் புகுந்தததா விடுதலை ஆவி!
தமிழரசுக்கட்சியின் தலைவர் கதிரைக்கு போட்டியிட எம்.ஏ.சுமந்திரன் தயாராகியுள்ள நிலையில் கிளிநொச்சியில் மாவீரர் குடும்பங்களது கௌரவிப்பிற்கு தனது சொந்த நிதியிலிருந்து நிதி அள்ளி வழங்கியுள்ளார். இதனிடையே வடமராட்சியில்; மாவீரர்களின் பெற்றோர்கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றிருந்த நிலையில் குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எ சுமந்திரனும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிலங்கையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்இடம் பெற்ற நேர்காணலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் […]
பாண்டியன்குளம் பிரதேசங்களில் சட்டவிரோத காடழிப்பு-அதிகாரிகள் மௌனம்!
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் சட்ட விரோத காடழிப்பு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் பிரதேச செயலக அதிகாரிகள் அசண்டையீனமாக இருப்பதாகவும் ,நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு மறைமுக அனுமதி வழங்குவதாக சந்தேகிப்பதாகவும் பிரதேச பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் குறிப்பாக குத்தகை அடிப்படையிலாக காணிகளை பெற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் குத்தகை அடிப்படையில் கேட்டு கொள்ளும் காணி அளவினை விடவும் மேலதிகமாக காணிசிரமதானம் செய்து வைத்து கொள்ளும் நபர்கள் மீது பிரதேச […]
மாங்குளம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர்!
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் மகா வித்தியாலயத்திற்கு நேற்றைய தினம் புதிய அதிபர் கடமைஏற்றுள்ளார் துணுக்காய் வலயத்தின் மையத்தில் அமைந்துள்ள 1AB தரத்தைச் சேர்ந்த மாங்குளம் மகாவித்தியாலய பாடசாலையானது இரண்டு வருடங்களுக்கு மேலாக அதிபர் இன்றி இயங்கி வந்தது குறித்த பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி கடந்த 17 ம் திகதி பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் இணைந்து பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர் இதேவேளை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றவேளை பிரதிநிதிகளுடன் உரையாடிய வடமாகாண கல்வி […]
தளபதி ராம் விடுதலை!
விடுதலை புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் நேற்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றையதினம் 6 வருட சிறை தண்டனை நிறைவு பெற்ற நிலையில் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் அம்பாறை மாவட்ட […]












