உலகத்தமிழர் பேரவை:புதிய உருட்டின் பங்காளரில்லை-எம்.ஏ.சுமந்திரன்

உலகத்தமிழர் பேரவையின் புதிய உருட்டான இமயமலைப் பிரகடனத்துக்கும் தமக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்பட வேண்டும் .அத்தகைய தொனிப்பொருளை மையப்படுத்திய ‘இமயமலைப் பிரகடனம்’ உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால்; ரணில் விக்கிரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்தப் பிரகடனத்தை […]

இரணைமடுவைச் சுற்றியுள்ளோர் அவதானம்!

இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து அதிகமாக இருப்பதால் இன்று இரவு தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் குளத்தின் வான் கதவுகள் பாதுகாப்பு கருதி திறக்கப்படும். இவ்வாறு கதவுகள் திறக்கப்படும் போது சிறிய அளவிலான திறப்புகளே இடம்பெறும். இதனால் பாரிய அனர்த்தங்கள் எதுவும் ஏற்படாது. இருந்த போதிலும் குளத்தின் கீழ் பகுதியில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர் குற்றவாளிக்கு இந்தியா வரவேற்பு!

ஜெனரல் சவேந்திர சில்வா டெல்லியில் இருந்து இந்தியாவின் டெஹ்ராடூனுக்கு பயணிப்பதற்கு இந்திய விமானப்படை வசதி செய்து கொடுத்துள்ளது. சவேந்திரசில்வா தனிப்பட்ட சொகுசு விமானத்தில் பயணிப்பது பற்றி தென்னிலங்கையில் சர்ச்சைகள் மூண்ட நிலையில் இந்தியா விளக்கமளித்துள்ளது இந்திய இராணுவ அக்கடமியில் (IMA) நடைபெற்ற பாசிங் அவுட் அணிவகுப்பில் அவர் கடந்த 9 ஆம் திகதி பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நிலையில் இந்தப் பயணம் இருந்தது. இந்திய விமானப்படை, விஐபிகளுக்கான நிலையான நெறிமுறையின்படி, இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தின் […]

இரகசியமாக ரணிலை சந்தித்த தமிழரசு கட்சியின் இரு உறுப்பினர்கள் !

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக தமிழர் பேரவையினர் ஜனாதிபதி ரணிலை சந்தித்த பின்னராக தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தனித்து ரணிலை சந்தித்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை முன்னதாக எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் உலகத்தமிழர் பேரவையினர் நேற்றைய தினம் சந்தித்துள்ளனர். இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் இருவரும் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் வரவு செலவுத்திட்ட வாக்களிப்பிற்கு முன்னதாக எம்.ஏ.சுமந்திரன், மற்றும் இரா.சாணக்கியன் […]

யாழில்.புளியமரங்களை நட பணிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை மாவட்ட செயலாளர் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த ஐம்பது ஆண்டுகளில் பயன்தரு புளியமரம் நாட்டியதாக வரலாறு இல்லை. தற்போது உள்ள புளியமரங்கள் எல்லாமே இயற்கையாக விதை மூலம் பரவியதே. அவையும் தற்போது வெட்டப்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது நாட்டுக்கு தேவையான புளி இறக்குமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு […]

கிளைமோர் தயாரித்தார்கள் என முன்னாள் போராளி உள்ளிட்ட இருவர் கைது

கிளைமோர் குண்டு தயாரித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் உள்ளிட்ட இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதில் முன்னாள் போராளியை மேலதிக விசாரணைக்கு என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கொழும்புக்கு அழைத்து சென்றுள்ளனர். மற்றையவர் கிளிநொச்சியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மன்னார் வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளியான ஆரோக்கியநாதன் சவேரியன் (வயது 48) என்பவரும் அவருக்கு உதவியதாக நாச்சிகுடா பகுதியை சேர்ந்த தம்பு குணசேகரம் […]

தாயகத்திலும் உள்ள தமிழின விரோதிகனை சந்தித்த புலம்பெயர் தமிழின விரோதிகள்

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள உலகத் தமிழர் பேரவையினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருன் கொழும்பில் விசேட சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன், அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். அண்மையில் இலங்கைக்கு வருகைத் தந்திருந்த உலகத் தமிழர் பரவையின் உறுப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன் போது இமாலய பிரகடனம் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. […]

தொப்புள் கொடிகளை அறுக்க சதி?

இந்திய இலங்கை மீனவர்களிடையே தமது முகவர்கள் ஊடக மோதல்களை தோற்றுவிக்க யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகம் மும்முரமாகியிருக்கின்றது. இலங்கை கடற்படையால் வேட்டையாடப்படும் இந்திய மீனவர்களிற்கு எதிராக கடற்தொழில் சமூகத்தினர் சார்பில் சட்டத்தரணிகளை களமிறக்க இந்திய துணைதூதரகம் தூண்டிவருகின்றதென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் அ,அன்னராசா சட்டவிரோத தொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள இழுவைமடி தொழிலை நிறுத்த வேண்டும். நிறுத்த தவறும் பட்சத்தில் தொப்புள் கொடி உறவாகிய தமிழ்நாடு ஆக […]

தமிழரசுக்கட்சி உடைவதனை ஏற்றுக் கொள்ளமுடியாது! சமூக விஞ்ஞான ஆய்வு மையம் கோரிக்கை.

தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு முகம் கொண்ட ஒரு கட்சியாகும். இடம் பெறவில்லை கட்சியின் தலமைத்துவ போட்டி காரணமாக அக் கட்சி உடையக் கூடிய வாப்புள்ள நிலையில் அதனை தவிர்ப்பதற்க்காக ஒரு கூட்டு தலமையை உருவாக்க வேண்டும் ஏன்று சமுக விஞ்ஞான ஆய்வுமையம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனரும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தமிழரசு கட்சியின் உயர் பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் மாதம் […]

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இந்த சட்டம் இரத்து செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்ததற்காக 9 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கண்காணிப்பாகம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. சிறுபான்மை இனத்தவர் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து […]

வடக்கு- கிழக்கு மக்களுக்கு தீர்வொன்றை வழங்குங்கள் – சஜித் கோரிக்கை

வடக்கு- கிழக்கு மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். உலகத்துக்கு நல்லிணக்கம் தொடர்பாக எடுத்துக்கூறாமல் நாட்டிலும் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் இவ் வருடத்தின் பெப்ரவரி மாதத்திற்குள் வடக்கு கிழக்கில் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என […]

கொடிகாமத்தில் வீதியில் இளைஞன் மீது தாக்குதல் நடாத்திய கும்பல் – இளைஞனின் வீடு தேடி சென்றும் தாக்குதல்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில், வீதியில் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறை கும்பல் ஒன்று , இளைஞனின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் நடாத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளம்போக்கட்டி பகுதி வீதியில், நேற்றைய தினம் புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞனை வழிமறித்த வன்முறை கும்பல் , இளைஞன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இளைஞன் மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு, தாக்குதலாளிகளிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். அதனை அடுத்து இளைஞனின் வீட்டுக்கு சென்ற […]